இலங்கையில் தனி ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த மத்திய அரசு ஆதரவு தர வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூ� ��ியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கேள்வி: இதுவரை உங்களுடைய நிறைவேறாத ஆசை என்ன என்ற கேள்விக்கு "தனி ஈழம்'' என்று பதிலளித்திருந்தீர்கள். அந்தத் "தனி ஈழம்'' தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளதே?
பதில்: "தனி ஈழம்'' வழங்குவதற்கு தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று எழுந்துள்ள கோரிக்கை வரவேற்கத்தக்கதே!. ஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டின் பே� �ில் இதைப் போல பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு ஒரு சில நாடுகள் தனி நாடுகள் என்ற அங்கீகாரத்தைப் பெற்றிருக்கின்றன. அதன் அடிப்படையில் தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்தி, அந்த வாக்கெடுப்பு முடிவின் அடிப்படையில் "தனி ஈழம்'' கிடைப்பதற்கு ஐக்கிய நாடுகள் மன்றம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு நமது இந்திய அரசு தேவையான ஆதரவும் அழுத்தமும் தர வேண்டும்.
கேள்வி: டெல்லியில் 16-4-2012 அன்று நடைபெற்ற உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்த முதலமைச்சர்கள் மாநாட்டில் பேசிய முதல்வர் ஜெயலலிதா - அவரது தலைமையின் கீழ் தமிழ்நாடு காவல் துறை, தி ட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்துவதில் தலைசிறந்த நிலையில் உள்ளது என்றும், அவரது ஆட்சிக் காலமான கடந்த 11 மாதங்களில் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுகின்ற எத்தகைய நிகழ்வுகளும் தமிழ்நாட்டில் நடைபெறவில்லை என்றும் பேசியிருக்கிறாரே?
பதில்: பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுகின்ற எத்தகைய நிகழ்வுகளும் தமிழ்நாட்டில் நடைபெறவில்லை என்று ஜெயலலிதா குறிப்பிட்டபோதிலும், தமிழகத்தில் இந்த 11 மாதக் காலத்தில் 386 கொ� ��ைகள், 178 செயின் பறிப்புகள், 34 வழிப்பறிச் சம்பவங்கள், பத்துக்கு மேற்பட்ட லாக்-அப் மரணங்கள் நடைபெற்� ��ுள்ளன. பரமக்குடியில் தலித் மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடைபெற்று, ஆறு பேர் உயிரிழந்துள்ளார்கள்.
சென்னை நெற்குன்றத்தில் அடகுக்கடை உரிமையாளர் குணாராமைக் கொன்று நகை கொள்ளை.
போச்சம்பள்ளி அருகில் இளம்பெண் படுகொலை. கோவையில் தம்பதியைக் கட்டிப் போட்டு நகை, பணம் கொள்ளை. தேன்கனிக்கோட்டையில் பெண் தர மறுத்தவர் கொலை. திருவல்லிக்கேணி லாட்ஜில் ஓட்ட� ��் ஊழியர் தங்கபாண்டியன் கொலை. சென்னை வாலிபரைத் தாக்கி இரண்டரை லட்சம் ரூபாய் பணம் பறிப்பு. என்றெல்லாம் வந்த சம்பவங்களை அவர் டெல்லியில் இருந்த காரணத்தால் படிக்க இயலவில்லை போலும்.
கேள்வி: தமிழ்நாட்டுக்கான மண்ணெண்ணெய் அளவினை மத்திய அரசு குறைக்க திமுக கூட்டுச் சதி செய்வதாக தமிழக அமைச்சர் பேரவையில் சொல்லியிருக்கிறாரே?
பதில்: தி.மு. கழகம் ஆட்சியிலே இருந்த போது தமிழகத்தின் தேவைகளுக்காக மத்திய அரசிடம் பலமுறை கடிதம் மூலமாகவும், நேரிலும் சென்று கேட்டு, கோரிக்கை வைத்து அதிக மண்ணெண்ணெயைப் பெற்று மக்களுக்கு வழங்கினோம். அவ்வாறு செய்ய முடியாதவர்கள் திமுக கூட்டுச் சதி என்று கூறி, பொது மக்களின் கோபத்திலிருந்து தப்பிக்கப் பார்க்கிறார்கள்.
கேள்வி: கடந்த பத்து மாதங்களில் நிலப்பட்டா ஒரு லட்சம் பேருக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாகவும், ஆனால் அதையும் தாண்டி ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 149 பேருக்கு பட்டாக்கள� � வழங்கப்பட்டுள்ளன என்றும் வருவாய்த் துறை அமைச்சர் பேரவையில் சொல்லியிருக்கிறாரே?
பதில்: தி.மு.கழக ஆட்சிக் காலத்தில் 2006-ஆம் ஆண்டு மே திங்கள் முதல் 15-2-2011 வரை மொத்தம் 8 லட்சத்து 29 ஆயிரத்து 236 இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் ஏழையெளிய மக்களுக்கு வழங்கப்பட்டன. இப்படி இலவச வீட்டு மனைப் பட்டா பெற்றவர்களில் ஆதி திராவிடர்கள் 2 லட்சத்து 16 ஆயிரத்து 649 பேர் - பழங� ��குடியினர் 16 ஆயிரத்து 323 பேர் - பிற்படுத்தப்பட்டோர் 3 லட்சத்து 9 ஆயிரத்து 927 பேர் - மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 2 லட்சத்து 45 ஆயிரத்து 463 பேர். ஏனையோர் 34 ஆயிரத்து 568 பேர்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
Post a Comment