ரஜினி நடிக்கும் 'கோ� ��்சடையான்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. முதல் கட்ட படப்பிடிப்பை லண்டனில் முடித்து விட்டு திரும்பி உள்ளனர். அடுத்த கட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடக்கிறது. இதற்காக ரஜினி, படத்தின் கதாநாயகி தீபிகா படுகோனே ஆகியோர் கேரளா செல்கிறார்கள்.
இந்த படத்தில் சரத்குமார், ஷோபனா, நாசர், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் ஆகியோரும் நடிக்கின்றனர். ரஜினி மகள் சவுந்தர்யா இயக்குகிறார். கே.எஸ். ரவிக்குமார் டைரக்ஷன் மேற்பார்வை செய்கிறார். கோச்சடையான் படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என்று ரஜினி ஏற்கனவே அறிவித்து இருந்தார்.
ஆனால் முன்னதாக செப்டம்பர் மாதம் கோச்சடையான் ரிலீசாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்து உள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோச்சடையான் தமிழ் தவிர தெலுங்கு, இந்தி, ஆங்கில மொழிகளிலும் ரிலீசாகிறது. ரஜினிக்கு ஜப்பானில் ரசிகர்கள் உள்ளதால் ஜப்பான் மொழியிலும் இதனை டப்பிங் செய்து வெளியிடுகின்றனர்.
Post a Comment