News Update :
Home » » வாழ்க்கையை மாற்றப் போகும் புளூடூத் 4....

வாழ்க்கையை மாற்றப் போகும் புளூடூத் 4....

Penulis : karthik on Thursday 15 March 2012 | 00:51

 
வயர் இணைப்பு எதுவுமின்றி இணைப்பைத் தரும் புளுடூத் தொழில் நுட்பம், எப்படி நம் வாழ்வையே மாற்றும்? என்ற கேள்வி நம்மில் பலருக்கு எழலாம். அதுதான் உண்மை என அடித்துக் கூறுகிறார் புளுடூத் எஸ்.ஐ.ஜி. (Special Interest Group) குழுமத்தின் செயல் இயக்குநர் போலே. இந்த குழுமத்தில், புளுடூத் தொழில் நுட்பத்தில் இயங்கும் சாதனங்களைத் தயாரிக்கும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன.
 
புளுடூத் முதலில் நமக்கு அறிமுகமான போது, பைல் மற்றும் டிஜிட்டல் தகவல்கள் பரிமாற்றத்திற்கு மிக அருமையான வசதி என அனைவரும் பாராட்டினோம்; பயன் படுத்தினோம். பின்னர், இதில் பல பிரச்னைகளைச் சந்திக்க வேண்டி இருந்தது.
 
தகவல் பரிமாற்றத்திற்கான சாதனங்கள் இணையாக இருந்து இணைப்பதில் சிக்கல், பாஸ்வேர்ட் அமைத்து இயக்குவதில் பிரச்னை, திடீரென தகவல் இணைப்பு அறுந்து போதல்,மற்றும் பிற உடனடியாகத் தீர்க்க இயலாத சிக்கல்களும் இருந்தன. இவை அனைத்தும் புளுடூத் 4 தொழில் நுட்பம் தீர்த்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
சரி, எப்படி தீர்க்கும்? என்ன என்ன வகையில் இது முந்தைய தொழில் நுட்பத்தைக் காட்டிலும் கூடுதல் திறன் கொண்டது? புளுடூத் தொழில் நுட்பம் இயங்கும் தொலைவு அதே 300 அடியாக உள்ளது. புளுடூத் 2ஐக் காட்டிலும் பதிப்பு 3, சற்றுக் கூடுதல் வேகத்தில் டேட்டாவினைக் கடத்தியது. பதிப்பு 2.1 ன் வேகம் 2Mbps ஆக இருந்தது. பதிப்பு 3ன் வேகம் 26Mbps ஆக உள்ளது. இது வீடியோ ஸ்ட்ரீமிங் போன்ற பணிகளுக்கு மிகவும் உதவியது.
 
புளுடூத் 4 இவற்றைக் காட்டிலும் கூடுதல் திறன் கொண்டதாக இருக்கும். ஐந்திலிருந்து பத்து மடங்கு வேகக் கூடுதல் இருக்கும். அதிக நாட்கள் மின்திறன் தரும் பேட்டரியுடன் இயங்கும் திறன் கொண்டதாக இருக்கும். இதனால், ட்ரெட்மில் போன்ற, தனி நபர் உடல்நலன் கணக்கிடும் சாதனங்களில் இதன் செயல்பாடு நமக்கு மிக மிக உதவியாக இருக்கும்.
 
அடுத்ததாக, என்.எப்.சி. எனப்படும் அண்மைக் கள தகவல் பரிமாற்றம் (Near Field Communication) திறன் கொண்ட சிப்களின் செயல்பாட்டிற்கு இந்த புளுடூத் பதிப்பு 4 மிகவும் பயன்படும்.
 
புளுடூத் 4 இந்த தொழில் நுட்பம் கொண்ட போன்களுடன் எளிதில் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியும். லேப்டாப், மொபைல் போன் மற்றும் ரௌட்டர் போன்ற சாதனங்களின் இணைப்பு, புளுடூத் பதிப்பு 4 மூலம் அதிகத் திறன் கொண்டதாக அமையும். இந்த தொழில் நுட்பத்திற்கேற்ப வடிவமைக்கப்படும் சாதனங்கள் அனைத்தும், புளுடூத் பதிப்பு 2 மற்றும் 3 ஆகியவற்றையும் கையாளும். புளுடூத் 4 ஏற்கனவே Motorola_Droid_ Razr_Maxx ஆகிய மொபைல் போன்களில் இணைக்கப்பட்டுள்ளது.
 
இந்த புதிய தொழில் நுட்பத்திற்கு Bluetooth Smart Ready எனப் பெயர் இடப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு கீழ் உள்ள தளத்தை அணுகவும்.
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger