ராம்கோபால் வர்மா இயக்கத்தில் நாயகி மதுஷாலினி, புகைப்பிடித்தல் காட்சியில் நடித்துள்ளார் இயக்குனர் பாலாவின் அவன் இவன் படத்தில் நடித்த மதுஷாலினி, ராம் கோபால் வர்மா இயக்கும்டிபார்ட்மென்ட் படத்துக்காக புகை பிடிக்கும் காட்சியில் நடித்துள்ளார்.
பாலிவுட்டில் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று கனவு கண்டேன். அது இப்போது நிஜமாகியுள்ளது.ராம்கோபால் வர்மா இயக்கத்தில் அமிதாப்பும் இப்படத்தில் நடிக்கிறார் என்பதால் எனக்கு இரட்டிப்பு சந்தோசம் என்று மதுஷாலினி கூறியுள்ளார்.
டிபார்ட்மென்ட் படத்தில் என்ற பெண் தாதாவாக நடித்துள்ளேன். திறமையை நிரூபிக்கக் கூடிய கதாப்பாத்திரம் என்று கூறலாம்.படத்தின் கதைப்படி நான் சிகரெட் பிடிக்கிற மாதிரி காட்சி உள்ளது. நானும் என்னுடைய கதாப்பாத்திரத்திற்காக புகை பிடித்தேன்.சண்டைக்காட்சிகள் எதிலும் போலியாக நடிக்க வில்லை. நான் நடித்த சண்டைக் காட்சிகளைப் பார்த்து என்னுடைய நண்பர்கள் அதிர்ச்சியானார்கள் என்று மதுஷாலினி கூறியுள்ளார்.
Post a Comment