சினிமாவில் திருப்தியே வரக்கூடாது, அப்படி வந்தால் வாழ்க்கையில் முன்னேற முடியாது என்று நடிகை ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார். நடிகர் கமல்ஹாசனின் மூத்தமகள் ஸ்ருதிஹாசன். 7ம் அறிவு படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஸ்ருதி, இப்போது தமிழில் தனுஷ் உடன் 3 படத்தில் நடித்துள்ளார். விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இதுதவிர தெலுங்கில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.
சினிமா அனுபவம் குறித்து நடிகை ஸ்ருதி கூறியுள்ளதாவது, நான் கமல் மகளாக இருந்ததால் சினிமாவில் ஹீரோயினாக வாய்ப்பு ஈஸியாக கிடைத்தது. ஆனால் அது நிரந்தரம் கிடையாது. சினிமாவில் நீடிக்க திறமை வேண்டும். திறமை இருந்தால் தான் ஜெயிக்க முடியும். மேலும் சினிமாவில் திருப்தியே வரக்கூடாது. அப்படி வந்துவிட்டால் முன்னேற முடியாது என்றார். மேலும் தன்னை எல்லோரும் கமல் மகளாகத்தான் பார்க்கீறார்கள். அதை மாற்ற தொடர்ந்து முயற்சிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
Post a Comment