நடிகை விஜயசாந்தி போன்று துணிச்சல் மிக்க கேரக்டரில் நடித்து, அவருடைய இடத்தை நிச்சயமாக பிடிப்பேன் என்று கூறியிருக்கிறார் நடிகை தன்ஷிகா. பேராண்மை படத்தில் 5 கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் தன்ஷிகா. முதல்படத்திலேயே சவாலான கேரக்டரில் நடித்து சண்டைக்காட்சிகளில் எல்லாம் நடித்து அசத்தினார். இவர் இப்போது வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள அரவான் படத்தில், ஆதிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
அரவான் படத்தில் நடித்த அனுபவம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தன்ஷிகா, என்னுடைய சினிமா கேரியரில் திருப்பம் கொடுக்கவுள்ள படமாக அரவான் இருக்கும். வசந்தபாலன் சாரின் ஒரு படத்தில் நடித்தால் போது, விருது வாங்கும் அளவுக்கு நம்மை நடிக்க வைத்து விடுவார். அரவான் படத்திலும் அப்படித்தான், எல்லோரையும் அருமையாக நடிக்க வைத்து இருக்கிறார். பேராண்மை படத்தை காட்டிலும் இந்தபடம் ரொம்பவே சவாலாக அமைந்தது. 20-30 அடி உயரத்தில் இருந்து கீழே ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றில் டூப் போடாமல் குதித்து இருக்கிறேன். இதுபோன்று படத்தில் நிறைய காட்சிகள் சவால் வாய்ந்ததாக இருந்தது.
இப்போது சினிமாவில் விஜயசாந்தியின் இடம் காலியாக இருக்கிறது. அவருடைய இடத்தை பிடிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை. இதற்காக அவரைப்போன்று துணிச்சலான கேரக்டரில் நடித்து வருகிறேன். நிச்சயம் அவருடைய இடத்தை பிடிப்பேன் என்று கூறினார்
Post a Comment