நில அபகரிப்பு மற்றும் மிரட்டல் தொடர்பாக நடராஜன் கைது செய்யப்பட்டார் என்று தஞ்சாவூர் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு தனது பெசன்ட் நகர் வீட்டில் வைத்து தஞ்சாவூர் போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்டார் நடராஜன். அவர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் தஞ்சாவூர் போலீஸார் ஒரு அறிக்கையை வெளியிட்டனர்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தஞ்சை அருகே விளார் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் தஞ்சாவூர் மாவட்டம் விளார் பஞ்சாயத்திற்கு உட்பட்ட விளார் கிராமத்தில் உள்ள தனது தகப்பனார் செங்கமலத்தின் பெயரில் இருந்த 20 ஏக்கர் புஞ்சை நிலத்தில் சுமார் 15 ஆயிரம் சதுரஅடி இடத்தை சட்ட விரோதமாக எம்.நடராஜன், சிலருடன் சேர்ந்து அதில் இருந்த மரங்கள் மற்றும் வேலிகளை சேதப்படுத்தி ஆக்கிரமிப்பு செய்து இருந்தார்.
இதுகுறித்து கேட்டபோது தன்னை அச்சுறுத்தி மிரட்டினார் என்று கூறியிருந்தார். அதன்பேரில் தஞ்சை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை போலீசாரால் எம்.நடராஜன் சென்னையில் இருந்தபோது சென்னை மாநகர காவல்துறையினர் உதவியுடன் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment