News Update :
Home » » நள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை; தர்ம அடி கொடுத்த மணப்பெண்

நள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை; தர்ம அடி கொடுத்த மணப்பெண்

Penulis : karthik on Saturday, 28 January 2012 | 00:21

திருமண மண்டபத்தில் இருந்து நள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளையை மணக்க மறுத்து, தர்ம அடி கொடுத்து மணப்பெண் விரட்டியடித்த சம்பவம், வாணியம்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கோணம்பேட்டையை சேர்ந்தவர் அசோகன். இவரது மகள் பிரீத்தி. இவருக்கும், பெங்களூரு விஜினாபுரத்தை சேர்ந்த சதீஷ் என்பவருக்கும், வாணியம்பாடியில், நேற்று முன்தினம் (26ம் தேதி) காலை திருமணம் நடப்பதாக இருந்தது. அதிகாலை, 4 .30 மணிக்கு மணப்பெண்ணுக்கு செய்ய வேண்டிய சடங்குகளை செய்ய மணமகன் சதீஷையும், அவரது உறவினர்களையும் பெண் வீட்டார் தேடினர். சதீஷ் மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்களை திருமண மண்டபத்தில் காணவில்லை. அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார், சதீஷை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால், திருமணம் பாதியில் நின்றது. இது குறித்து பெண் வீட்டார், வாணியம்பாடி போலீசில் அன்று இரவு புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிந்து, மாப்பிள்ளை வீட்டை சேர்ந்த சிலரை அழைத்து விசாரித்த போது, சதீஷ் பெங்களூரில் இருப்பது தெரிந்தது. போலீசார், பெங்களூருசென்று சதீஷை வாணியம்பாடிக்கு கொண்டு வந்தனர். போலீஸ் ஸ்டேஷனில் நேற்று இரு வீட்டாரை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது சதீஷ், "நாட்டறாம்பள்ளியைச் சேர்ந்த ஒரு பெண், 100 சவரன் நகையை வரதட்சணையாக கொடுத்து தன்னை திருமணம் செய்ய தயாராக இருப்பதாகவும், ஆனால், பிரீத்தி வீட்டார், 25 சவரன் நகை மட்டும் வரதட்சணையாக கொடுத்ததாகவும், இதனால் பெங்களூருக்கு ஓடிவிட்டதாகவும் 100 சவரன் நகை போட்டால் பிரீத்தியை திருமணம் செய்து கொள்வதாக' கூறினார். அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார், இப்போதைக்கு, 25 சவரன் நகைகள் தான் போட முடியும் என்றும், பாக்கி நகைகளுக்கு இரு ஆண்டில் போடுவதாக
பத்திரம் எழுதிக் கொடுப்பதாக கூறினர்.
"இப்போதே. 100 சவரன் நகைகள் போட்டால் தான் பிரீத்தியை திருமணம் செய்து கொள்வோம்' என கூறி விட்டு, சதீஷ் மற்றும் அவரது உறவினர்கள் அங்கிருந்து வெளியேறினர். இதைக் கேட்ட பிரீத்தி ஆத்திரமடைந்தார். "நகைக்காக திருமணத்தை நிறுத்தி விட்டு ஓடியவரை திருமணம் செய்ய மாட்டேன்' என, உறுதியாகக் கூறி, தர்ம அடி கொடுத்து சதீஷையும், அவரது குடும்பத்தினரையும் ஓட ஓட விரட்டினார்.
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger