குழந்தைகளுக்கு தமிழ் தெரியவில்லை! குஷ்பு வேதனை!!
இன்றுள்ள குழந்தைகளுக்கு தமிழ் மொழியும், தமிழ் மொழி பற்றியும் தெரியவில்லை என்று நடிகை குஷ்பு வேதனை தெரிவித்துள்ளார். ஈரோட்டில் நடைபெற்ற மொழிப் போர் தியாகிகள் வீர வணக்க நாள் கூட்டத்தில் நடிகை குஷ்பு கலந்து கொண்டு பேசினார். அப்போது, இன்றைய குழந்தைகளுக்கு தமிழ் மொழி பற்றி தெரிவது இல்லை. ஆங்கிலம் படிப்பது அவசியம்தான். ஆனால் தமிழ் மொழியை மறக்கக் கூடாது. பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு தமிழ் மொழியை கற்று கொடுக்க வேண்டும். நான் வேறு மாநிலத்தை சேர்ந்தவர். எனக்கு தமிழ் மொழி பற்றி என்ன தெரியும் என்று நீங்கள் நினைக்கலாம். நான் கடந்த 25 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வசித்து வருகிறேன். தமிழ் மொழியை பேசுகிறேன். தமிழ் மொழியை நேசிக்கிறேன். தமிழ் உணர்வு- நரம்புக்கும், நாடிக்கும் ஒரு புத்துணர்வை ஊட்டுகிறது. இந்தியாவில் மொத்தம் 42 மொழிகள் உள்ளன. இதில் சமஸ்கிருதம் மட்டுமே செம்மொழி அந்தஸ்து பெற்றிருந்தது.
இந்த மொழிக்கு அடுத்தபடியாக தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று கொடுத்தவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி தான். இதனால் உலகம் முழுவதும் தமிழன் தலை நிமிர்ந்து நிற்கிறான். தமிழன் என்று சொல்வதில் பெருமைப்படுகிறான். இந்த பெருமையை நமக்கு பெற்று கொடுத்தவர் கருணாநிதி தான், என்று பேசினார்.
Post a Comment