News Update :
Home » » பாட்டியை பார்க்க ரயிலில் தனியாகச் சென்ற 5 வயது சிறுமி

பாட்டியை பார்க்க ரயிலில் தனியாகச் சென்ற 5 வயது சிறுமி

Penulis : karthik on Saturday 21 January 2012 | 12:34

மும்பை புறநகர் பகுதியில் வசிக்கும் தமிழ் குடும்பத்தை சேர்ந்த ஐந்து
வயது சிறுமி, தன் பாட்டியை பார்ப்பதற்காக, ரயிலில் தனியாகச் சென்ற
சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பை புறநகர் பகுதியான
முலுந்த்தில்உள்ள இந்திரா நகரில் வசிப்பவர் முத்து. தமிழகத்தை பூர்வீகமாக
கொண்டவர். இவரின் ஐந்து வயது மகள் செல்வி. அருகில் உள்ள மழலையர்
பள்ளியில் படித்து வருகிறாள். செல்வியின் பாட்டி, மும்பையின் மற்றொரு
புறநகர் பகுதியான சியோனில் வசித்து வருகிறார். செல்விக்கு பாட்டி மீது
மிகவும் பிரியம். இதனால், தன் தாயாரிடம், பாட்டியை பார்க்க அழைத்துச்
செல்லும்படிவற்புறுத்தினாள். அவரோ காதில் வாங்கவில்லை.
சமீபத்தில், ஒருநாள் பள்ளியில் இருந்து வீடு
திரும்பிய செல்வி, வழக்கம்போல்பாட்டியை பார்க்க அழைத்துச் செல்லும்படி,
தாயாரிடம் வற்புறுத்தினாள். "ஒழுங்காக போய் படிக்கிற வேலையைப் பார்' என,
அவளின் தாயார் கூறி விட்டார். ஆத்திரம் அடைந்த செல்வி, அழுது
கொண்டே,முலுந்த் ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்றாள். ஏற்கனவே, பாட்டி
வீட்டுக்கு சென்ற அனுபவம் இருந்ததால், அங்கு நின்று கொண்டிருந்த ஒரு
ரயிலில் ஏறி அமர்ந்தாள். ரயில் புறப்பட்டதும், அந்த பெட்டியில் இருந்த
ஒரு பெண், குழந்தை தனியாக இருப்பதை பார்த்து விசாரித்தார். ஆனால், செல்வி
தமிழில் பேசியதால், அந்தபெண்ணுக்கு எதுவும் புரியவில்லை. இதைத்
தொடர்ந்து, ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதற்குள், ஐந்து ஸ்டேஷன்களை கடந்து,
ஆறாவதாக உள்ள வித்யவிகார் ரயில்வே ஸ்டேனுக்கு ரயில் வந்து விட்டது.
அங்கிருந்த ரயில்வே போலீசார், சிறுமியைமீண்டும் முலுந்த் ரயில்வே
ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து, அங்கிருந்த போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதற்குள், செல்விகாணாமல் போன விஷயம் தெரிந்து, அவளின் பெற்றோர் அனைத்து
இடங்களிலும் தேடினர். அப்போது, முலுந்த் ரயில்வே போலீசாரிடம் இருந்து,
அவர்களுக்கு அழைப்பு வந்தது. அவர்கள் அங்கு விரைந்தனர். பெற்றோருக்கு
அறிவுரை கூறிய போலீசார், செல்வியை அவர்களிடம் ஒப்படைத்தனர்.
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger