News Update :
Home » » புதிய அணை கேரளாவுக்கு மட்டுமேசொந்தமாக இருக்கும்: முதல்-மந்திரி உம்மன்சாண்டி

புதிய அணை கேரளாவுக்கு மட்டுமேசொந்தமாக இருக்கும்: முதல்-மந்திரி உம்மன்சாண்டி

Penulis : karthik on Saturday 14 January 2012 | 10:08

முல்லைப் பெரியாறில் கட்டப்படும் புதிய அணை கேரளாவுக்கு மட்டுமே சொந்தமாக
இருக்கும். தமிழகம் உரிமை கோர முடியாது என்று முதல்-மந்திரி உம்
மன்சாண்டி கூறினார். கேரளாமுதல்-மந்திரி உம்மன்சாண்டி அளித்த பேட்டி
வருமாறு:-
முல்லைப் பெரியாறு அணையை ஒட்டி எழுந்த பிரச்சினை குறித்து தமிழக முதல்வர்
ஜெயலலிதாவுக்கு2 கடிதங்கள் எழுதினேன். ஒன்றுக்கு மட்டுமே பதில் வந்தது.
அந்த கடிதத்தில் என்னை குற்றம் சாட்டி எழுதப்பட்டு இருந்தது. அடுத்த
கடிதத்துக்கு இது வரை பதில் வரவில்லை. இரண்டாவது கடிதம் தமிழ் நாட்டில்
நடக்கும் வன்முறை சம்பவங்கள் தொடர்பானது ஆகும்.
முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழக முதல்வருடன் பேச விரும்புவதாக ,
பெங்களூரில் என்னை சந்தித்த அமைச்சர் பன்னீர்செல்வத்திடம் தெரிவித்தேன்.
ஒரு கூட்டறிக்கை விட நான் தயாராக இருக்கிறேன். முல்லைப் பெரியாறில் புதிய
அணை கட்டும் யோசனை இப்போது தோன்றியது அல்ல.
மத்திய நீர்வள கமிஷன் 1979-ம் ஆண்டிலேயே தெரிவித்த யோசனை ஆகும். இது
தொடர்பாக முன்பு கேரளாவில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக
என்ஜினீயர்கள் புதிய அணை கட்ட ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து , இரு மாநில என்ஜினீயர்களும் சேர்ந்து புதிய அணை கட்டுவதற்கான
இடத்தை தேர்வு செய்யும் நடவடிக்கையில்ஈடுபட்டனர். தற்போதுள்ள அணையில்
இருந்து 1,300 அடி தொலைவில் புதிய அணை கட்டுவதற்கான இடத்தை தேர்வு
செய்தனர். புதிய அணை கட்டப்படும் வரை பழைய அணையின் பராமரிப்பை இரண்டு
மாநில அரசுகளும் வழக்கமாக மேற்கொள்வது என்று அப்போது முடிவானது.
ஆனால் , இந்த யோசனையை தமிழக அரசு பின்னர் கைவிட்டது. எங்களை பொருத்தவரை
, அணையின் பாதுகாப்பு குறித்து கவலை உள்ளது. அணைப் பகுதியில்
வாழும்மக்களின் பாதுகாப்பை உதாசீனப்படுத்த முடியாது. தமிழகத்துக்கு
தண்ணீரைப் பற்றிகவலை. எங்களுக்கு பாதுகாப்பு குறித்த அச்சம். அவர்களின்
(தமிழகம்) கவலையில் நியாயமில்லை.
புதிய அணை கட்டினாலும் , தமிழகத்தின் பங்கில் ஒரு சொட்டு தண்ணீர் அளவு
கூட குறையாது என்று உறுதி அளித்த பிறகும் , அவர்கள் சமாதானம் அடையவில்லை.
தண்ணீர் பங்கீட்டு முறையை ஒழுங்குப்படுத்த மற்றும் கண்காணிக்க
சுதந்திரமான அமைப்பை ஏற்படுத்தவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். அதே
சமயம் , புதிய அணை கட்டும் விஷயத்தில் பின்வாங்கப் போவதில்லை. புதிய
அணையை கட்டியே தீருவோம்.
புதிய அணை கேரளா பகுதிக்குள் அமையும். அணையின் கட்டுமான செலவுகளை கேரளா
அரசே செய்யும். எனவே புதிய அணை கேரளாவுக்கு மட்டுமே சொந்தமானதாக
இருக்கும். கூட்டு உரிமை என்ற பேச்சுக்கே இட மில்லை. புதிய அணையில்
தமிழ்நாடு அரசு உரிமை கோர முடியாது.
இவ்வாறு உம்மன்சாண்டி கூறினார்.
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger