News Update :
Home » » ஆசிரியர் தகுதி தேர்வில் எளிதாக வெற்றி பெற வேண்டுமா?: கல்வி அதிகாரிகள் யோசனை

ஆசிரியர் தகுதி தேர்வில் எளிதாக வெற்றி பெற வேண்டுமா?: கல்வி அதிகாரிகள் யோசனை

Penulis : karthik on Wednesday, 11 July 2012 | 04:25





தமிழகம் முழுவதும் நாளை (12-ந்தேதி) ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறுகிறது. 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள தொடக்கப் பள்ளியில் பணியாற்ற கல்வி தகுதி உள்ளவர்களுக்கு (ஆசிரியர் பட்டயப் பயிற்சி) முதல்தாள் தேர்வும் 6 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்ற கல்வி தகுதி உள்ள பட்டதாரிகளுக்கு 2-ம்தா� �் தேர்வும் நடக்கிறது. 

இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 6 லட்சத்து 56 ஆயிரத்து 88 பேர் எழுதுகிறார்கள். 1027 மையங்களில் தேர்வு நடக்கிறது. தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு முதன்முதலாக இப்போதுதான் நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 78 மையங்களில் ஆசிரியர்கள் தேர்வு எழுத இருக்கிறார்கள். 

தேர்வர்களை கண்காணிக்கும் பணியில் 55,339 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். காலையில் முதல்தாள் தேர்வும், பிற்பகல் 2-ம் தாள் தேர்வும் நடக்கிறது. ஒவ்வொரு தேர்வும் 90 நிமிடங்கள் நடக்கின்றன. 150 வினாக்களுக்கு விடை அளிக்க வேண்டும். 

ஆசிரியர் தகுதி தேர்வை ஆண்களைவிட பெண்களே அதிக அளவில் எழுதுகிறார்கள். 6 1/2 லட்சத்தில் 4 லட்சத்து 75 ஆயி� ��ம் பேர் பெண் தேர்வர்கள் ஆவர். ஆண்கள் ஒரு லட்சத்து 81 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். 

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்ற விரும்புவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெறவேண்டும். எனவே ஆசிரியர்கள் பணியை நிர்ணயிக்கும் இந்த தேர்வு இன்றியமையாதவையாக கருதப்படுகிறது. 

கடந்த 3 மாதமாக இத்தேர்வுக்கு தயாராகி வந்த தேர்வர்களுக்கு நாளை நடக்கும் தேர்வு தங்களது தகுதியை மட்டுமல்ல வாழ்க்கையையும் நிலை நிறுத்துவதாக அமைய உள்ளது. இந்த தேர்வில் வெற்றி பெறவேண்டும். அதிக மதிப்பெண் பெற்று விரைவில் பணிக்கு செல்ல வேண்டும் என்ற நம்பிக்கையில் லட்சக்கணக்கானவர் காத்து இருக்கிறார்கள். 

தேர� �வில் எப்படி பங்கேற்க வேண்டும், குறிப்பிட்ட நேரத்திற்குள் சரியான விடையளித்து வெற்றி காண்பது எப்படி? அதற்கான அறிவுரைகளை கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவற்றை பின்பற்றி னால் வெற்றி நிச்சயம். 

முக்கிய டிப்ஸ் வருமாறு:- 
1) தேர்வு மையத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக தேர்வர்க ள் செல்ல வேண்டும். 

2) 30 நிமிடங்களுக்கு முன்னதாக தேர்வு எழுதும் அறைகளுக்கு சென்று அமர வேண்டும். 

3) காலையில் நடக்கும் தேர்விற்கு ஓ.எம்.ஆர். தாளை 10.25 மணிக்குள்ளும், பிற்பகல் நடக்கும் தேர்விற்கு 2.25 மணிக்குள்ளும் பூர்த்தி செய்ய வேண்டும். 

4) விடைத்தாளை பிழைகள் இல்லாமல் சரியாக ப� ��ர்த்தி செய்ய வேண்டும். 

5) 10.30 மணிக்கு தொடங்கும் தேர்வு 12 மணிக்கு முடிகிறது. பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் தேர்வு 4 மணிக்கு முடிகிறது. 

6) ஒவ்வொரு தேர்விலும் 150 வினாக்கள் கேட்கப்படும். அவற்றிற்கு 90 வினாக்களுக்கு சரியான விடை எழுதி இருந்தால் தேர்ச்சி பெற்றதாக கருதப்படும். 

7) 150 � ��ேள்விகளுக்கு 90 நிமிடங்களில் விடையளிக்க வேண்டும். அதாவது ஒரு கேள்விக்கு 36 வினாடியில் விடையளித்தால்தான் அனைத்து வினாக்களுக்கும் விடை எழுத முடியும். 

8) தேர்வர்கள் ஒரு வினாடியையும் வீணடிக்காமல் முழுமையாக பயன்படுத்தினால்தான் அதிக மதிப்பெண் பெறமுடியும். 

9) தேர்வர்கள் பின்னால் திரும்பி பார்த்தோ அருகி� ��் உள்ளவர்களை பார்த்தோ நேரத்தை வீணடிக்க வேண்டாம். 

10) வினாக்களை நன்கு புரிந்து கொண்டு விடையளிக்க வேண்டும். 

11) ஓ.எம்.ஆர். விடைத்தாளில் கறுப்பு அல்லது நீலநிற பால்பாயிண்ட் பேனாவை பயன்படுத்த வேண்டும். 

12) பென்சில், கால்குலேட்டர், செல்போன் தேர்வுகளுக்கு எடுத்து செல்ல அனுமதி இல்லை. 

13) தேர்வு நடைபெறும் போது தேர்வறையை விட்டு வெளியேற அனுமதி இல்லை. 

14) விண்ணப்பத்தில் தங்களது பெயரை தவறாக குறிப்பிட்டுள்ளவர்கள், தேர்வு நடைபெறுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக சென்று முதன்மை கண்காணிப்பாளரை சந்திக்க வேண்டும். அரசிடம் தங்களது சரியான பெயருக்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.








Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger