சுவிஸ் வங்கியில் கறுப்பு பணத்தை பதுக்கியவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவது குறித்து வருமானவரித்துறை பரிசீ� ��த்து வருவதாகக் கூறப்படுகிறது.
சுவிஸ் வங்கி உள்ளிட்ட வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கறுப்புப் பணத்தை மீட்டு இந்தியாவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பது பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளின் நீண்டகால கோரிக்கை.
இதைத் தொடர்ந்து வெளிநாட்டு வங்கிகளில் பணம் பதுக்கியோர் விவரத்தை மத்திய அரசு சேகரித்தது. இதன் அடிப்படையில் பணம் பதுக்கியோர் மீது வழக்குத் தொடரவும் திட்டமிட்டிருந்தது.
இருப்பினும் வெளிநாடுகளுடனான இரட்டை வரிவிதிப்பு ஒப்பந்தம் இதில் சிக்கலை ஏற்படுத்தியது. ஆனாலும் சுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்திருந்த 700 இந்தியர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டது. இவர்கள் ரூ12 ஆயிரத்து 740 கோடி பணத்தைப் பதுக்கி வைத்திருந்தனர்.
பணத்தை மீட்பதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கியோரே அதை ஒப்படைத்தால் அவர்களுக்கு பொதுமன்னிப்பு கொடுக்கலாம் என்ற அடிப்படையில் வருமானவரித்துறை பரிசீலித்து வருகிறது. மேலும் அவர்கள் மீது வழக்கு எதுவும் தொடராமல் இருப்பது பற்ற� � பரிசீலித்து வருவதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment