முன்னாள் மத்திய மந்திரியும், ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவின் மருமகன் சுபாஷ் யாதவ். முன்னாள் எம்.பி. இவரது மருமகன் பப்பு யா� �வ் என்கிற பங்கஜ். இவர் பாட்னாவில் உள்ள டிகா போலீஸ் நிலையத்தின் பின்புறம், ஒரு வயலில் பிணமாகக் கிடந்தார்.
அவரது உடலை துப்பாக்கி குண்டுகள் துளைத்து இருந்தன. அவரது உதவியாளர் பப்லு என்பவர், பப்பு யாதவின் வீட்டில் சுட் டுக் கொல்லப்பட்டு பிணமாகக் கிடந்தார். ஆகவே மர்ம ஆசாமிகள் பப்பு யாதவின் வீட்டுக்குள் புகுந்து, அவரது வேலைக்காரரை முதலில் சுட்டுக் கொன்று விட்டு, பின்னர் பப்பு யாதவை கடத்திச் சென்று, சுட்டுக் கொன்று, பிணத்தை போலீஸ் நிலையத்தின் பின்புறம் உள்ள வயலில் போட்டுவிட்டு சென்று இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.
Post a Comment