அரசியல் கட்சிகள் வன்முறை போராட்டத்தில் இறங்கி, பொதுச்சொத்துக்களுக்கு சேதாரம் விளைவிப்பதை தடுக்க வழிமுறைகளை வகுக்க வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டி ல் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி பிரகாஷ் சிங் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, எஸ்.கே. முகோபாத்யா ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "வன்ம� ��றை போராட்டத்தில் இறங்கி பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கிற அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாமா? தற்போது இருக்கிற சட்டங்களைக் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்க முடியுமா?'' என்பது குறித்து மத்திய அரசு தனது பதிலை ஒரு வாரத்தில் தெரிவிக்கும்படி உத்தரவிட்டனர்.
Post a Comment