இந்தியாவின் முதல் சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் ராஜேஷ் கன்னா இன்று பிற்பகல் மும்பையில் உள்ள அவரது வீட்டில் மரணம் அடைந்தார்.
இந்தியாவின் முதல் சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் ராஜேஷ் கன்னா(69) கடந்த ஏப்ரல் மாதம் 1ம் தேது உடல்நலக்குறைவு காரணாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் 4 நாட்கள் தங்கி சிகிச்சை எடுத்துக் கொண்டு வீடு திரும்பினார். பின்னர் சிறுநீரகக் கோளாறு காரணமாக கடந்த மாதம் 23ம் தேதி மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கேயே 2 வாரங்கள் இருந்தார். குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக கடந்த 14ம் தேதி ம� �ன்றாவது முறையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருடன் அவரது மனைவி டிம்பிள் கபாடியா, இளைய மகள் ரிங்கி ஆகியோர் துணையாக இருந்தனர். கர்ப்பமாக இருக்� ��ும் மூத்த மகள் டிவிங்கிள் தனது கணவரும் , பாலிவுட் நடிகருமான அக்ஷய் குமாருடன் அவ்வப்போது வந்து பார்த்துச் சென்றார். நேற்று ராஜேஷ் கண்ணா மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இந்நிலையில் இன்று காலை அவரது உடல்நிலை மோசமானது. உடனே உறவினர்கள் அனைவரும் மும்பையில் உள்ள அவரது � ��ீட்டிற்கு வந்தனர்.
இதற்கிடையே அவரது உடல்நிலை மேலும் மோசமாகி பிற்பகலில் மரணம் அடைந்தார். அவரது உடல் இன்று மாலை 4.30 மணிக்கு தகனம் செய்யப்படுகிறுத. அவரது மறைவிற் கு பாலிவுட் நட்சத்திரங்கள் தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
ஆளாளுக்கு ஒரு ஹிட் கொடுக்கவே போராடுகின்றனர். ஆனால் கடந்த 1969ம் ஆண்டு முதல் 1972ம் ஆண்டு வரை அவர் தொடர்ந்து 15 ஹிட் படங்கள் கொடுத்துள்ளார் என்பது குறி்ப்பிடத்தக்கது. மேலும் அவர் கடந்த 1992ம் ஆ� �்டு முதல் 1996ம் ஆண்டு வரை லோக் சபா உறுப்பினராக இருந்துள்ளார்.
Post a Comment