உத்தரபிரதேச மாநிலத்தில் கடத்தப்பட்ட 16 வயது சிறுமியை மீட்ட விசாரணை அதிகாரியும், கிராம நிர்வாகியும் சேர்ந்து காவல் நிலையத்தில் வைத்து ஒரு வார காலம் கற்பழித்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் சீதாபூரைச் சேர்ந்தவர் ராமேஷ்வர்(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவரது மகள் சுனிதா(16)(பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த ஏப்ரல் மாதம் 2ம் தேதி அதே ஊரைச் சேர்ந்த ராஜ்னேஷ் என்ற வாலிபர் சுனிதாவை கடத்திச் சென்றுள்ளார். இது குறித்து ராமேஷ்வர் போலீசில் � ��ுகார் கொடுத்தும் அவர்கள் வழக்குப் பதிவு செய்ய மறுத்துவிட்டனர். இதையடுத்து அவர் உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவி்த்தார்.
மேலும் தனது புகாரை எடுத்துக்கொள்ளவில்லை என்றால் தீக்குளிப்பேன் என்று கடந்த ஜூன் மாதம் 3ம் தேதி மிரட்டினார். இந்த காட்சி தொலைக்காட்சிகளில் வந்ததைப் பார்த்த போலீஸ் உயர் அதிகாரிகள் ராமேஷ்வர் புகாரை உடனே ஏற்றுக்கொள்ளுமாறு உள்ளூர் போலீசாருக்கு உத்தரவிட்டனர ். இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். வழக்குப் பதிவு செய்யப்பட்ட 48 மணிநேரத்திற்குள் அதாவது ஜூன் 5ம் தேதி விசாரணை அதிகாரியான எஸ்.ஐ. ராம் பிரசாத் பிரேமி சுனிதாவை மீட்டுவிட்டதாக கிராம நிர்வாகி ராமேஷ்வரிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால் சுனிதாவை வீட்டுக்கு அனுப்பவில்லை. மாறாக ஒரு வார காலமாக எஸ்.ஐ.யும், கிராம நிர்வாகியும் சேர்ந்து காவல் நிலையத்தில் வைத்து சுனிதாவை மாறி, மாறி கற்பழித்து வந்துள்ளனர். மகள் வீட்டுக்கு வராததையடுத்து அவரை விடுவிக்காவிட்டால் காவல் நிலையம் முன்பு தீக்குளிப்பேன் என்று ராமேஷ்வர் மீண்டும் மிரட்டல் விடுத்தார்.
இதையடுத்து தான் சுனிதா விடுவிக்கப்பட்டார். வீட்டுக்கு வந்த அவர் தன்னை கடத்திய வாலிபர், எஸ்.ஐ. மற்றும் கிராம நிர்வாகி ஆகியோர் தனக்கு செய்த கொடுமையை விவரித்தார். இது குற� ��த்து ராமஷேவர் போலீஸில் புகார் செய்தும் புண்ணியமில்லாமல் போனது.
Post a Comment