இணையதள தகவல்கள் தொடர் பான அரசின் கட்டுப் பாட்டு விதிகளை ரத்து செய்யக்கோரி மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் உறுப்பினர் ராஜீவி தீர்மானம் கொண்டு வந்தார். பிரபல இணையதளங்களில் முக்கி ய தலைவர்கள் பற்றி சர்ச்சைக்குரிய தகவல்கள் இடம்பெற்றதற்கு இந்தியா அரசு சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இணையதள தகவல்களை கட்டுப்படுத்த தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் புதிய விதிமுறைகள்(2011) சேர்க்கப்பட்டன. இந்த விதிமுறை அரசு கெஜட்டில் கடந்த மாதம் 13ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த விதிமுறையின் படி, அவதூறு, ஆபாச, கண்டனத்துக்குரிய, சட்டவிரோதமான, மைனர்களை பாதிக்கும் தகவல்களை, ஒருவரின் தனிப்பட்ட விஷயங்கள் ஆகியவை இணையதளங்கள் வெளியிடக் கூடாது.
இந்நிலையில் இணையதளங்களை கட்டுப்படுத்தும் அரசின் விதிமுறைக்கு மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கட்சி நேற்று எதிர்ப்பு தெரிவித்தது. இந்த விதிமுறைகளை நீக்கக்கோரி மார்க்சிஸ்ட் உறுப்பினர் ராஜீவி தீர்மானம் கொண்டு வந்து பேசியதாவது: இணையதளங்களை கட்டுப்படுத்தும் தகவல் தொழில்நுட்ப சட்டம், பேச்சு மற்றும் � ��ருத்து சுதந்திரத்துக்கு எதிரானது. இயற்கை நீதிக்கு எதிரானது. எனவே இணையதளங்களை கட்டுப்படுத்தும் அரசின் விதிமுறைகளை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு ராஜீவி பேசினார்.
இது குறித்து மாநிலங்களவை எதிர்கட்சி தலைவர் அருண் ஜேட்லி பேசுகையில், ''தகவல்களை தடுத்து நிறுத்தும் காலம் எல்லாம் போய்விட்டது. இணையதளத்தில் தகவல்களை கட்டுப்படுத்துவது மிகவும் கஷ்டம். 1970ம் ஆண்டுகளில் இணையதளம் இருந்திருந்தால், அவசரநிலை பிரகடனம் தோல்வியில் முடிந்திருக்கும்.
அதே நேரத்தில் இணையதளத்தில் வெளியாகும் வெறுப்பு பேச்சுக்கள், கலவரத்தை தூண்டும் அபாயம் உள்ளது. இது குறித்து, அரசு பரிசீலனை செய்ய வேண்டும்'' என்றார்.
இதற்கு பதில் அளித்த தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் � ��பில் சிபல், ''இணையதளங்களின் தணிக்கை, ஒழுங்குமுறை போன்றவற்றில் அரசுக்கு நம்பிக்கை இல்லை. சம்பந்தப்பட்ட குழுவின ரின் ஆலோசனை, அனுமதி பெற்றபின்பே இந்த விதிமுறை கொண்டுவரப்பட்டது'' என்றார்.
1970ம் ஆண்டுகளில் இணையதளம் இருந்திருந்தால், அவசரநிலை பிரகடனம் தோல்வியில் முடிந்திருக்கும்
Post a Comment