பெரியபாளையத்தை அடுத்த வெங்கல் அருகே உள்ளது வேம்பேடு கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் ரகு. லாரி டிரைவர். இவருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று காலை 2-வது பெண் குழந்தை கோட்டீஸ்வரி (வயது 4) வீட்டு முன்பு விளையாடிக் கொண்டு இருந்தாள். அப்போது மர்ம வாலிபர் சிறுமியை நைசாக அழைத்துச் சென்றார்.
வீட்டில் இருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் ஒதுக்குப்புறமாக இருந்த அரசமரத்தடியில் வைத்து சிறுமியை அவன் பாலியல் சித்ரவதை செய்து விட்டு தப்பி விட்டான். அலங்கோலமாக நின்று கொண்டு இருந்த சிறுமி கோட்டீஸ்வரியை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து விசாரித்தனர். சிறுமி பாலியியல் சித்ரவதைக்குள்ளானது தெரியவந்தது.
சிகிச்சைக்காக சிறுமி ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சிறுமியை கடத்தி சித்ரவதை செய்தது யார் என்று தெரியவில்லை. சிறுமி குடும்பத்துக்கு பழக்கமான நபர்தான் இந்த கொடூர செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
வெங்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Post a Comment