இளைய தலைமுறையினரின் ஆற்றல் குறித்து பேச, ஐ.நா. சபையின் அழைப்பை ஏற்று கென்யாவிற்கு பயணம் செய்ய இருக்கிறார் நடிகை குஷ்பு. இதுகுறித்து குஷ்பு கூறியதாவது, நாட்டின் எதிர்காலமே அடுத்த தலைமுறையினரான இளைஞர்களின் கையில்தான் ஒப்படைக்கப்பட உள்ளது. 2013 இளைஞர்களின் தன்னிகரற்றத் திறமையை வெளிக்கொணர வேண்டும். அதற்கான சிறப்புக்கூட்டம் ஐ.நா. சபையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் கலந்து கொள்ளவும், இளைஞர்களைப் பற்றியும், இளைய தலைமுறையினர் பற்றியும் சிறப்புரையாற்ற அழைப்பு விடுத்திருந்தனர்.
2013ல் இளைய தலைமுறையினரின் 70 சதவீத ஆற்றலை நாட்டின் வளர்ச்சிக்கு எப்படியெல்லாம் உபயோகிப்பது என்பது பற்றிய கருத்தரங்கில் கலந்து கொண்டு பேச வாய்ப்பளித்தமைக்கு ஐ.நா. சபைக்கு தமிழர்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உலகில் தினமும் 20 டாலருக்கு குறைவாக வருமானம் உள்ள அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை உயர்த்த, இளைஞர்களை எத்தகைய முயற்சியில் ஈடுபட வைக்க வேண்டும் என்று பேச போகிறேன். அதற்கான கூட்டம் மார்ச் 15ம் முதல் 18ம் தேதி வரை ஐ.நா. சபை சார்பில், கென்யாவில் உள்ள நைரோபியில் நடைபெற இருக்கிறது. அதில் கலந்து கொள்வதற்காக கென்யாவுக்கு கிளம்புகிறேன்.
இன்றைய உலகின் ஒவ்வொருவரின் வெற்றியிலும் இளையதலைமுறையினரின் பங்கு அதிகம் இருக்கிறது. அது தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற கருத்தை பிரதிபலிப்பேன் என்று கூறியுள்ளார்.
Post a Comment