
நடிகர்கள் பாடகர்கள் ஆவது ஒன்றும் புதிதல்ல. அந்தவகையில் விஜய், சிம்பு, விக்ரம், தனுஷ் ஆகியோர்கள் வரிசையில் இப்போது விமலும் சேர்ந்து இருக்கிறார். இதுநாள் வரை நடிகராக மட்டும் இருந்து வந்த விமல், இப்போது பாடகராகவும் மாறியிருக்கிறார். பசங்க, களவாணி, வாகை சூடவா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகர் விமல். இவர் இப்போது சிலு சிலுன்னு ஒரு சந்திப்பு, மசாலா காபி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் மசாலா காபி என்ற படத்தில் தனது சொந்த குரலில் ஒரு பாட்டு ஒன்று பாடியிருக்கிறார் விமல். விஜய் எபினேசரின் இசைக்கு விமல் பிரமாதமாக பாடியிருக்கிறார். பாட்டும் ரொம்ப பிரமாதமாக வந்திருப்பதாக கூறியிருக்கிறார் விஜய் எபினேஷர். சுந்தர்.சி இப்படத்தை இயக்கி வருகிறார். விமலுடன் அஞ்சலி, ஓவியா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது.
Post a Comment