மிகவும் அபூர்வமான புற்று நோய் ஒன்றிற்கு உள்ளான இந்திய அணியின் சகலத்துறை ஆட்டக்காரர் யுவராஜ் சிங் அமெரிக்க பொஸ்டன் மருத்துவ மனையில் இருந்து வெளியேறியுள்ளார்.புற்று நோய்க்கான மூன்றாவது சிகிச்சைக்கு உட்பட்ட நிலையிலே அவர் வெளியேறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தாம் தற்போது, திடமான ஆரோக்கியத்தை படிப்படையாக பெற்று வருவதாக கூறியுள்ள யுவராஜ் சிங் தாம் மருத்துவமனையில் இருந்த போது தமக்கு ஆசிர்வாத செய்திகளை தெரிவித்த உலகளாவிய ரசிகர்களுக்கு நன்றியை தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், மீண்டும் யுவராஜ் சிங் இறுதி பரிசோதனைக்காக மே மாத முதல் வாரத்தில் குறித்த மருத்துமனைக்கு வருகை தரவுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, அவருடன் இணைந்து பல சாதனைகளை மேற்கொண்ட இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பெற்ற 100வது சதத்திற்கு யுவராஜ் சிங் தமது பாராட்டினை தெரிவித்துள்ளார்.
Post a Comment