ஐனவரி 6 வரலாற்றின் மிகச் சிறந்த ஒருநாள் சர்வதேச கிரிக்கட் அணியில் இலங்கை அணியின் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர் முரளிதரன் இணைந்தார்.
ஐனவரி 7
இலங்கை அணியின் பந்துவீச்சாளர் அஐந்த மென்டிஸ் திருமண பந்தத்தில் இணைந்தார். 23 வருடங்களின் பின்பு ஆஷஸ் கிண்ண தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து ஐனவரி 10
சர்வதேச கிரிக்கட் போட்டியிலிருந்து மகாய நிடினி ஓய்வு பெற்றார். ஐனவரி 14
இந்திய நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சினுக்கு கலாநிதிப் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டது. ஐனவரி 21
இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் உலக கிண்ண போட்டிகளுக்கு பிறகு ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற உள்ளதாக அறிவித்தார். ஐனவரி 22
ஒருநாள் போட்டி அணித் தலைவர் பதவியில் இருந்து ஸ்மித் விலகுவதாக அறிவித்தார். பெப்ரவரி 05
சூதாட்ட புகாரில் சிக்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு ஆயுட்கால தடை விதிக்கப்பட்டது. பெப்ரவரி 14
கிரிக்கெட் சரித்திரத்தில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றி உலக சாதனை படைத்த முத்தையா முரளிதரன் சுயசரிதையை வெளியிட்டார். பெப்ரவரி 15
உலக கால்பந்து பிரபலங்களில் ஒருவரான ரொனால்டோ சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பெப்ரவரி 17
10-வது உலகக் கிண்ண கிரிக்கட் தொடர் டாக்காவில் இன்று துவக்க விழாவுடன் கோலாகலமாக ஆரம்பமானது. பெப்ரவரி 22
2012 ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி அரங்கம் திறக்கப்பட்டது. மார்ச் 02
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் 15 வது போட்டியாக பெங்களூருவில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அயர்லாந்து அணி அபார வெற்றி பெற்றது. மார்ச் 04
உலகின் முன்னிலை டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவரான செரீனா வில்லியம்ஸின் நுரையீரலில் குருதிக்கட்டியொன்று கண்டுபிடிக்கப்பட்டதால் அவர் அவசர சத்திரசிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டார். மார்ச் 07
இலங்கை கிரிக்கட் அணியின் நட்சத்திர சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் பந்துவீச்சுக் குறித்து அவுஸ்திரேலிய நடுவர் டெரல் ஹெயார் மீண்டும் குற்றச்சாட்டு மார்ச் 08
உலகக் கிண்ண போட்டியில் யுவராஜ் சிங் உலக சாதனை படைத்தார். அயர்லாந்துக்கு எதிராக அபாரமாகப் பந்துவீசிய யுவராஜ் சிங் 31 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் உலகக் கிண்ண வரலாற்றில் இடது கை சுழற்பந்து வீச்சாளராக மிகச் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்து சாதனை படைத்தார். கால்பந்தாட்டப் போட்டியொன்றில் மத்தியஸ்தர் ஒருவர் 36 தடவை சிவப்பு அட்டைகளை காட்டிய சம்பவம் ஆர்ஜென்டீனாவில் இடம்பெற்றுள்ளது. இதுவொரு புதிய உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டது. மார்ச் 18
ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் இந்த உலகக் கிண்ண போட்டிகளுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு. மார்ச் 25
இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டியில் 18 ஆயிரம் ரன்களை கடந்து புதிய சாதனை படைத்தார். ஏப்ரல் 02
10வது உலகக்கிண்ண கிரிக்கெட் இறுதி போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா சம்பியனாகியது. ஏப்ரல் 08
ஒரே நாளில் 70 லட்சம் ரசிகர்களை இணைந்து கொண்ட கால்பந்தாட்ட நட்சத்திரமான மெஸ்ஸி ஏப்ரல் 12
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் 15 சிக்ஸர்களை விளாசி அவுஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் உலக சாதனை படைத்தார். ஏப்ரல் 18
இலங்கையணியின் புதிய தலைவராக டில்ஷான் தெரிவு செய்யப்பட்டார். ஏப்ரல் 22
உலகின் பிரபலமான 100 பேர் பட்டியலை 'டைம்' வார இதழ் வெளியிட்டு இருந்தது. இதில் இந்திய கிரிக்கெட் அணியின் கப்டன் மகேந்திர சிங் டோனியும் இணைந்து கொண்டார். ஏப்ரல் 23
இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான லசித் மாலிங்க, டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். மே 12
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் சாதனைக்கு சொந்தக்காரரானர் லஷித் மாலிங்க. மே 15
19 ஆவது தடவையாக இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ணத்தை கைப்பற்றி மன்செஸ்டர் யுனைடெட் கழகம் புதிய சாதனை. மே 22
ரியல் மாட்ரிட் அணியின் அதிரடி வீரர் ரொனால்டோ லீக் கால்பந்து போட்டியில் கோல் அடிப்பதில் புதிய சாதனை படைத்தார். மே 25
அவுஸ்திரேலிய முன்னாள் கிரிக்கட் வீரர் டெரி ஜென்னர் உடல்நலக்குறைவால் காலமானார். ஜூன் 05
லண்டனை சேர்ந்த மோ பரா ஐரோப்பிய 10 ஆயிரம் மீற்றர் போட்டியில் 26 நிமிடம் 46.57 வினாடிகளில் ஓடி புதிய சாதனை படைத்தார். ஜூன் 13
கனடா கிராண்ட் பிறீஸ் கார்பந்தயம்: பிரிட்டன் வீரர் ஜென்சன் சாதனை படைத்தார். ஜூன் 30
இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்கவுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலினால் (ஐ.சி.சி.) 3 மாத காலத்திற்கு போட்டி தடை விதிக்கப்பட்டது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியோடு இலங்கையின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான ஜெயசூர்யா கிரிக்கட்டில் இருந்து ஓய்வு பெற்றார். ஜூலை 13
13 ஆவது உலகக் கிண்ண வலைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் அவுஸ்திரேலிய அணி சம்பியனானது. ஜூலை 30
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது பயிற்சி போட்டியின் போது ராகுல் டிராவிட் 2 கேட்ச் பிடித்தார். இதன் மூலம் சர்வதேச போட்டிகளில் மொத்தம் 400 கேட்ச் பிடித்து சாதனை படைத்தார். ஆகஸ்ட் 09
பங்களாதேஷ் அணியுடனான டெஸ்ட் போட்டியில் ஸிம்பாப்வே அணி 130 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. சுமார் 6 வருடங்களின் பின்னர் ஸிம்பாப்வே அணி பங்குபற்றிய முதலாவது டெஸ்ட் போட்டி இதுவென்பது குறிப்பிடத்தக்கது. செப்டம்பர் 13
ஐ.சி.சி விருதுகளில் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதினையும் மக்கள் தெரிவு விருதினையும் இலங்கை அணி வீரர் குமார் சங்ககார பெற்றுக் கொண்டுள்ளார். செப்டம்பர் 24
பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயிப் அக்தர் தனது புத்தகத்தில் சச்சின், டிராவிட் உள்ளிட்டோர் குறித்து விமர்சித்திருந்தார். இதனால் பல சர்ச்சை ஏற்பட்டிருந்தது. அக்டோபர் 10
ஜப்பான் கிராண்ட்பிரிக்ஸ் 'பார்முலா-1' கார்பந்தயத்தில் மூன்றாவது இடம் பிடித்த "ஆர்.பி.ஆர். ரெனால்டு' அணியின் செபாஸ்டியன் வெட்டல், உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டு, புதிய சாதனை படைத்தார். அக்டோபர் 23
2011ம் ஆண்டுக்கான ரக்பி உலக கிண்ணத்தை நியூலாந்து கைப்பற்றியது. அக்டோபர் 24
மலேசியாவில் நடந்த பைக் ரேஸ் விபத்தில் இத்தாலி வீரர் சைமன் செல்லி பரிதாபமாக இறந்தார். நவம்பர் 08
முன்னாள் உலக குத்துச் சண்டை வீரர் ஜோ பிரேசியர் உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்துள்ளார். நவம்பர் 15
சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் தனது 22வது ஆண்டை இன்று நிறைவு செய்தார் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். டிசம்பர் 05
டேவிஸ் கோப்பைக்கான இறுதி போட்டியில் நடாலின் அதிரடி ஆட்டத்தால் ஸ்பெயின் 3-1 என்ற கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. சர்வதேச கோல்ப் போட்டிகளில் பங்கேற்ற முன்னணி வீரரான டைகர் உட்ஸ்(Tiger Woods) இரண்டு ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். சாம்பியன்ஸ் சாலஞ்ச் ஹொக்கி தொடரில் பெல்ஜியம் அணி 4-3 என்ற கணக்கில் இந்தியாவை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது. டிசம்பர் 18
உலக சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடரின் இறுதிப்போட்டியில் சீனாவில் வாங் யான் சாம்பியன் பட்டம் வென்றார். |
Post a Comment