ரேணிகுண்டா புகழ் சஞ்சனாவுக்கு சென்னையில் உள்ள தனது வீட்டிலேயே தங்கிவிட விருப்பம்தான்… ! ஆனால் தான் வளர்க்கும் பாசமான முயல்கள் என்னாவது.. ?அதனால் வாரத்துக்கொருமுறை மும்பை ஓடிவிடுகிறார்.வளர்ப்பு பிராணியாக அதாவது வீட்டிலேயே அதற்கென அறை ஒதுக்கி மெத்தை போட்டு அழகாக வளர்கிறார். என்ன முயல் மீது வித்தியாச பாசமென்றால்… மென்மையான மனதுடையவை அவை. நாய்களுக்கு கூட அதற்கென ஒரு குணம் உண்டு.. ஆனால் முயல் அற்புதமான பிராணி..
ரொம்ப அமைதியாக இருக்கும்..எவ்வளவு மன அழுத்தம் இருந்தாலும் அதைப்பார்த்த நொடியில் யோகா செய்ததுபோல் ஒரு நிம்மதி பரவும்.. என்ன கவனித்துக்கொள்வது கொஞ்சம் கஷ்டம்.. எனக்கு அவைகளை கவனிப்பதில் தான் சந்தோசமே .. இப்போது நான்கு குட்டிகள் வேறு போட்டிருக்கிறது என்று துள்ளிக் குதிக்கிறார்.. சரி என்ன படங்கள் கைவசம் என்றால்..
ரேணிகுண்டாவில் அவ்வளவு அழுத்தமான ரோல் கிடைத்தது.. இயக்குனர் பன்னீர் செல்வம் என்னை அவ்வளவு மெனக்கிட்டு மாற்றினார். அதேபோல் அழுத்தமான பாத்திரங்களில் நடிக்கவே காத்திருந்தேன். இடையில் கேட்டுக்கொண்ட நண்பர்களுக்காக கோ மறுபடியும் ஒரு காதல், மயங்கினேன் தயங்கினேன், வெயிலோடு விளையாடு போன்ற படங்களில் எல்லாம் ஒரு பாட்டுக்கு ஆடிக் கொடுத்திருக்கிறேன்.
சினிமாவில் நண்பர்கள் முக்கியம். அதன்பிறகு கிடைத்தார் இயக்குனர் கணேசன் காமராஜ். யாருக்குத் தெரியும் படத்தில் ஹீரோயினாக அதிர்ந்து பயந்து பயப்படவைக்கிற நடிப்பைக் கொட்டியிருக்கேன். அடுத்து அதியமான் சார் இயக்கும் தப்புத் தாளங்கள் படத்தில் ஒரு கிளாமர் ஹீரோயின்… சி எஸ் அமுதன் சார் இயக்கும் இரண்டாவது படம் படத்திலும் நடிக்கிறேன்.
இப்போதான் ஸ்டார்ட் பண்ணியிருக்கேன்.. இருந்தாலும் அவார்டுக்குரிய படங்களில் நடிக்க பெரிய ஆசை இருக்கு.. பணம் பற்றி கவலையில்லை.. ஒரு சிலருக்கு உதவியாக இருக்கவும், என் தேவைக்கு பணம் இருந்தால் போதும்.. மற்றபடி நல்ல கதாபாத்திரங்கள்… நல்ல நடிகை என்ற பெயர், புகழ் தான் வேண்டும்.. ஹோம்லி, கிளாமர் எது உங்க ரூட்? ரெண்டுமே பண்ணனும்.
எதையும் விட்டு வைக்கக்கூடாது. சவாலா எடுத்து நடிக்கணும். ஷோ கேஸ் மாதிரி இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஒண்ணு கைத்தட்டல் வாங்கணும்.. இல்லைன்னா, கிரங்கடிக்கணும் பாஸ்.. நமக்கு ரெண்டு ரூட்டுமே ஓகே தான் என்கிறார். உங்களை அடுத்த நமீதா என்கிறார்களே கோடம்பாகத்தில்..
சிம்ரன், நமீதா இந்த இரண்டு பேருமே கவர்ச்சியில் தங்களுகென்று தனி முத்திரை பதித்து விட்டார்கள். அதேபோல நானும் தரமான கவச்சியில் கலக்கவே விரும்புகிறேன். தரமான கவர்ச்சியென்றால் என கதாபாத்திரம் கவர்ச்சியாக இருக்கலாம் ஆனால் அது ரசிகர்கள் மனதில் இரக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
தப்பாக அவர்களை தூண்டக்கூடாது. என்னை உதாரணமாக வைத்து நாளை வரும் புதிய நடிகையிடம் நீங்கள் அடுத்த சஞ்சனாவா என்று நீங்கள் கேட்க வேண்டும். குறைந்த பட்சம் அதற்காகவாவது நான் உழைக்க வேண்டும் அல்லவா? சஞ்சானாவிடமிருந்து அசத்தலான பதில் வருகிறது.
Post a Comment