'மெரினா' படத்தை அடுத்து விக்ரம் நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளார் பசங்க பாண்டிராஜ்.
சமீபத்தில் வெளியான பாண்டிராஜின் 'மெரினா' படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை 'பசங்க புரடக்ஷன்ஸ்' தயாரிப்பில் வந்தது. மெரினாவில் 'வணக்கம், வாழவைக்கும் சென்னை..' என்று தொடங்கும் இந்தப் பாடலில் விக்ரம், பிரகாஷ் ராஜ், இயக்குனர்கள் அமீர், சசிகுமார், சினேகா, விமல் ஆகியோர் நடித்துள்ளனர். இச்சமயத்தில் விக்ரமுக்கும், இயக்குனர் பாண்டிராஜீக்கும் ஒரு நல்ல நட்பு உருவானது. இதைதொடர்ந்து பாண்டிராஜ், விக்ரமை வைத்து புது படம் ஒன்றை இயக்கவிருக்கிறார்.
தற்போது விக்ரம் டைரக்டர் விஜயின் "தாண்டவம்" படத்தில் நடித்துவருகிறார். படத்தின் ஷீட்டிங் டெல்லி மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் படமாக்கப்படுகிறது. இதன் வேலைகள் முடிவடையும் நிலையில், விக்ரம் அடுத்த கட்ட படத்திற்கு தயாராகுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Post a Comment