நடிகர் பிரகாஷ் ராஜ் இயக்கி வெளிவந்திருக்கும் படம் தோனி. படத்துக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். பிரபல தொலுங்கு இயக்குனர் பூரி ஜகநாத்தின் மகன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். பிரபு தேவா ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.
இதில் மாணவன் சரியாக படிக்கவில்லை என்றால், அவன் முட்டாள் இல்லை. அவனுக்குள் இருக்கும் வேற திறமைகளை ஊக்குவிக்க வேண்டும். படிச்சு மார்க் வாங்குவது மட்டும் தான் கல்வி என்பதை மாற்றி நம் கல்வி முறையில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பது தான் படத்தின் மையக் கருத்து.
இந்த படம் மராத்தி படமான 'ஷீக்ஷநச்சிய ஆய்ச கோ' என்ற படத்தின் தழுவலில் அமைந்துள்ளது. படிப்பில் கவனம் செலுத்தாத மாணவன், தோனி மாதிரி கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறான். அதை புரிந்து கொள்ளாத தந்தையும் ஆசிரியரும் அவனை துன்புறுத்துவதால், அந்த மாணவன் 'கோமா' நோய்க்கு தள்ளப்படுகிறான். அந்த நோயிலிருந்து மகனை தந்தை போராடி மீட்டெடுத்து, மீண்டும் கிரிக்கெட்டில் உற்சாகப்படுத்துவது தான் கதை.
இதைப்பற்றி பிரகாஷ் பேசும்போது, நல்ல கதையை எங்கிருந்து எடுத்தால் என்ன? நான் சினிமாவை வியாபாரமாக பார்ப்பவன் அல்ல. என் நிருவனமான டூயட் மூவீஸ் தாயாரிக்கும் அனைத்து படங்களும் தரமான நல்ல படங்களாக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
நல்ல படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் தான் தோனி படத்தை நானே தயாரித்து இயக்கி இருக்கிறேன் என்றார்.
மராத்தியில் வெளியான ஒரு படம் தான் இப்படத்துக்கு இன்ஸ்பிரேஷன். நல்ல கதைகளை எந்த மொழியில் இருந்து வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். இதில் எந்த தவறும் இல்லை.
கல்வி முறையில் மாற்றம் வேண்டும் என்பதையும், மாணவர்களுக்கு இருக்கும் திறமைகளை ஊக்குவிக்க வேண்டும் என்பதையும் இந்தியில் வெளியான "தாரே ஜமீன் பர்", " 3 இடியட்ஸ்" போன்ற படங்கள் உணர்த்தின. அதே கருத்தை உணர்த்தும் வகையில் "தோனி" படமும் அமைந்திருக்கிறது.
Post a Comment