News Update :
Home » » தமிழனுக்கு எதிரான விஜயின் முள்ளமாரித்தனம்

தமிழனுக்கு எதிரான விஜயின் முள்ளமாரித்தனம்

Penulis : karthik on Saturday, 7 January 2012 | 18:42

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் படம்
துப்பாக்கி. படத்தில் விஜய்யின் உழைப்பை பற்றி தன் நட்பு வட்டாரத்தில்
புகழ்ந்து வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.
இந்நிலையில் படத்தில் நடிக்கும் ஒரு கதாபாத்திரத்தை பற்றி வெளியே
சொல்லாமல் ரகசியமாக வைத்துள்ளார்களாம். விஜய்யுடன் மலையாள நடிகர் ஜெயராம்
முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதே அந்த ரகசியமாம்.
முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சினை நாளுக்கு நாள் தீவிரமாவதை அடுத்து
படத்தில் ஜெயராம் நடிக்கும் விஷயத்தை இப்போதைக்கு வெளியே சொன்னால் ,
பிரச்சினை கிளம்பிவிடுமோ என்றுபதறிப்போய் உள்ளார்களாம் படத்தின்
இயக்குனரும் நடிகரும்.
முல்லைப் பெரியாறு பிரச்சினையின் சூடு தனிந்ததும்விஷயத்தை வெளியே
சொல்லலாம் என்று திட்டமிட்டுள்ளார்களாம்.
அப்படிப் பார்த்தால் இப்போது வெளிவர இருக்கும் பல தமிழ் படங்களில் மலையாள
சேச்சிகளே ஹீரோயின்களாக இருக்கிறார்கள். அதைப் பற்றி சினிமா ரசிகர்கள்
உட்பட யாருமே கவலைப்படவில்லை. நடிகருக்கு ஒரு நியாயம் நடிகைகளுக்கு ஒரு
நியாயமா ? என்ற கேள்வியே எழுகிறது.
அதே சமயத்தில் தன் படத்தில் நடிக்கும் இரண்டு மலையாள நடிகைகளையும்
போயிட்டு வாங்க , பிரச்சனை முடிந்ததும் பார்த்துக்கொள்ளளாம் என்று
வீட்டுக்கு அனுப்பிவைத்த இயக்குனர் பாரதிராஜா போன்ற உணர்வுப்பூர்வமான
இயக்குனர்களும் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிடவேண்டாம்.
இதே விஜய் தேர்தல் நெருங்கிய வேளையில் பரப்பரப்புக்காகவும்,தனது
ரசிகர்களின் பலத்தை காட்டுவதற்காகவும் இலங்கை அரசைஎதிர்த்து
ராமேஸ்வரத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தினார். அதன் விளைவு விஜயின்
'காவலன்' படத்தை இலங்கையில் திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்ட போது 'எங்கள்
தேழி அசின் நடித்திருப்பதால் காவலனை இலங்கையில் திரையிட அனுமதிக்கிறோம்'
( எப்படி தேழி, எந்த முறையில் தோழி, எந்த நட்பு கோப்பெருஞ்சோழன் -
பிசுரத்திரயார் நட்போ ! கேவலம்டா சாமி....) என்று ராஜபக்சே அறிவித்து
படத்துக்குஅனுமதி அளித்தார். அத்தோடு விஜயின் இலங்கை எதிர்ப்பு காணாமல்
போனது...
இலங்கை அரசுக்கு எதிராக கையெழுத்து கேட்க போனவர்களையே துரத்தி அடித்து
தனது சிங்கள விசுவாசத்தை காட்டி தனது வேலாயுதம் படத்தை எந்த வித
சிக்கலும் இல்லாமல் இலங்கையில்திரையிட வைத்தார்.
இப்போது முல்லை பெரியாறு அணை பிரச்சனை பத்திக்கொண்டு எரியும் இந்த
வேளையில் தனது படங்களை கேரளாவில் திரையிடுவதில் எந்தவிதமான சிக்கலும்
வந்துவிட கூடாது என்பதற்காகவே வாய் மூடி மௌனம் காத்தவர் சிக்கலே இல்லாமல்
இருக்க இப்போது மலையாள நடிகரையே தனது படத்தில் நடிக்கவைகிறார் என்றால்
விஜய் செய்திருக்கும் இந்த முள்ளமாரித்தனமான காரியம் அவரது சுயரூபத்தை
,மக்கள் நலனில் அவருக்குள்ள அக்கறையை மிக தெளிவாக எடுத்துக்காடுகிறது.
திரைப்படங்களில் தொடையை தட்டி வீரவசனம் பேசுவது அல்ல வீரம் இதுபேன்ற
நேரங்களில் துணிந்து குரல் கொடுப்பது தான் வீரம் .
இவர் போன்ற நடிகர்களுக்கு பிரச்னை என்றால் ரசிகன் என்ற பெயரில் உயிரையே
கொடுக்க முன் வரும் தமிழனுக்கு ஒரு பிரச்சனை என்றால் இந்த ஹீரோக்கள்
எல்லாம் பொட்டைத்தனமாக வாய் மூடி ஒளிந்துகொள்வது தான் வாடிக்கையாக
உள்ளது....
அது சரி முருகதாஸ் ....முருகதாஸ் என்று ஒரு மானமுள்ள தமிழன் இருந்தாரே
தனது இலட்சிய படத்தை (ஆம் அறிவு ) தமிழனுக்காக அற்பநிகிறேன்
என்றாரே...படத்தில மூச்சுக்கு மூச்சு தமிழன் தமிழன்னு சொன்னாரே அந்த அந்த
மானமுள்ள முருகதாஸா தமிழனுக்கு தன்னித்தர மருப்பவனோடு கைகோர்கிறார்...
அட போங்கடா... நீங்க எல்லாவருமே தெளிவா தான் இருக்கீங்க உங்க உங்க
விசயங்களில் இளிச்சவாயன் தமிழன் தான் இன்னும் தெளிவாகல்ல...தெளிவாகவும்
மாட்டான்..
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger