News Update :
Home » » புயல் நிவாரணத்துக்கு ரூ.5 ஆயிரம் கோடி: மத்தியக் குழுவிடம் கோருகிறது தமிழகம்

புயல் நிவாரணத்துக்கு ரூ.5 ஆயிரம் கோடி: மத்தியக் குழுவிடம் கோருகிறது தமிழகம்

Penulis : karthik on Saturday, 7 January 2012 | 19:58

"தானே" புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சீர் செய்யவும், மீட்பு
மற்றும் நிவாரணப் பணிகளைநிரந்தரமாக மேற்கொள்ளவும் ரூ.5 ஆயிரம் கோடிக்கு
மேல் தேவை என மத்திய குழுவிடம் தமிழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
வங்கக் கடலில் உருவான `தானே' புயல் கடந்த டிசம்பர் 30-ந் தேதி கரையை
கடந்தபோது கடலூர் மாவட்டத்திலும், புதுச்சேரியிலும் வரலாறு காணாத சேதத்தை
ஏற்படுத்தியது.
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிடுவதற்காக உள்துறை இணைச்
செயலாளர் லோகேஷ் ஜா தலைமையில் மத்திய அரசு குழு ஒன்றை அமைத்தது.
மத்திய வேளாண்மைத் துறை இயக்குநர் கே.மனோகரன், மத்திய நீர்வள ஆதாரத்துறை
கண்காணிப்பு பொறியாளர் சுந்தரமூர்த்தி, மத்திய தரைவழிப் போக்குவரத்துத்
துறை பொறியாளர் திக்விஜய் மிஸ்ரா, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப
நலத்துறை முதுநிலை மண்டல இயக்குநர் பழனிவேலு, மத்திய மின்துறை இயக்குநர்
விவேக் கோயல், மத்திய திட்டக்குழு முதுநிலை ஆராய்ச்சி அலுவலர் முரளிதரன்,
மத்திய குடிநீர் மற்றும் பொதுசுகாதாரத் துறை துணை ஆலோசகர் ஆர்.ஜெ.தத்தா
சௌத்ரி, மத்திய கால்நடை மற்றும் மீன்வளத் துறை நிர்வாக இயக்குநர்
பி.பால்பாண்டியன் ஆகியோர் அடங்கிய இந்த குழு `தானே' புயலால்
பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக நேற்று சென்னை வந்தது.
மாலை 4 மணிக்கு தலைமைச் செயலகம் வந்த இந்த குழுவினர் தமிழக அரசு தலைமைச்
செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கியை சந்தித்து 2 மணி நேரம் ஆலோசனை
நடத்தினார்கள்.
அதைத்தொடர்ந்து புயல் பாதிப்பு மற்றும் சேத விவரங்கள்
குறித்துசம்பந்தப்பட்ட துறையின் தலைவர்கள் மற்றும் செயலாளர்களின் ஆய்வுக்
கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், நிதித்துறை, வருவாய்த் துறை,
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பொதுப்பணித் துறை,
வேளாண்மைத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, உணவுத் துறை, எரிசக்தி
துறை, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை, உணவு வழங்கல் துறை,
தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் ராஜீவ் ரஞ்சன், வருவாய் நிர்வாக ஆணையர்
ஞானதேசிகன், சென்னை மாநகராட்சி கமிஷனர் பி.டபிள்ï.சி.டேவிதார் ஆகியோர்
கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், புயல் சேத விவரங்கள் கொண்ட விரிவான அறிக்கையை மத்திய
குழு தலைவர் லோகேஷ் ஜாவிடம் தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி
வழங்கினார். புயல் சேத விவரங்கள் பற்றிய வீடியோ படக் காட்சிகளும் மத்திய
குழு உறுப்பினர்களுக்கு காண்பிக்கப்பட்டு, புயல் பாதிப்பு குறித்து
விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
ஆலோசனை கூட்டம் முடிந்து வெளியேவந்த மத்திய குழுவின் தலைவர் லோகேஷ் ஜா
நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக வந்துள்ளோம்.
தமிழக அரசின் தலைமைச் செயலாளரை சந்தித்து புயல் சேத விவரங்களை கேட்டு
அறிந்தோம். துறை வாரியாக ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி அந்தந்த துறையைச்
சேர்ந்த செயலாளர்கள் விரிவாக எடுத்துரைத்தார்கள். புயல் பாதிப்பு குறித்த
விரிவான அறிக்கை ஒன்றையும் தமிழக அரசு சார்பில் அளித்து உள்ளனர். புயல்
பாதிப்பு குறித்த வீடியோ படக் காட்சிகளையும் பார்த்தோம்.
புயலால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை ஞாயிற்றுக்கிழமை (இன்று) முதல்
பார்வையிட இருக்கிறோம். 3 நாட்கள் வரை இந்தப் பணிகளை மேற்கொள்வோம். அரசு
அதிகாரிகளும், மாவட்ட அதிகாரிகளும் எங்களுடன் வந்து சேத விவரங்களை
எடுத்து கூறுவார்கள். புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட பிறகு,
சென்னைக்கு மீண்டும் செவ்வாய்க்கிழமை வந்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை
நடத்துவோம். அதன்பிறகு டெல்லி சென்று புயல் சேத விவரங்கள் குறித்த
அறிக்கையினை மத்திய அரசிடம் அளிப்போம்.
இவ்வாறு லோகேஷ் ஜா கூறினார்.
தானே புயலால் வரலாறு காணாத சேதம் ஏற்பட்டிருப்பதால் ரூ.5 ஆயிரம் கோடிக்கு
மேல் நிவாரண நிதியுதவி வழங்க வேண்டும் என்றுகோரி மத்திய குழுவிடம் தமிழக
அரசின் சார்பில் கோரிக்கை விடப்பட்டிருப்பதாக உயர் அதிகாரி ஒருவர்
கூறினார்.
மத்திய குழுவினர், இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதுச்சேரியில் புயலால்
பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு சேத விவரங்களைச் சேகரிக்கின்றனர்.
நாளை (9-ந் தேதி) கடலூர் மாவட்டத்திற்கு செல்லும் மத்திய குழுவினர்,
அங்கு புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுகின்றனர் அன்றைய தினம்
கடலூரிலேயே தங்குகிறார்கள்.
10-ந் தேதி மத்திய குழுவினர் இரண்டு குழுக்களாக பிரிந்து சென்று புயல்
பாதித்த பகுதிகளை பார்வையிடுகிறார்கள். ஒரு குழுவினர், தஞ்சாவூர்,
திருவாரூர், நாகப்பட்டினம் ஆகியடெல்டா மாவட்டங்களிலும், மற்றொரு
குழுவினர் விழுப்புரம்,காஞ்சீபுரம் மாவட்டங்களிலும் புயல் பாதித்த
பகுதிகளை பார்வையிடுகின்றனர். பின்னர் சென்னை வந்து தமிழக அரசின் உயர்
அதிகாரிகளுடன் மீண்டும் ஆலோசனை நடத்திவிட்டு டெல்லி திரும்புகிறார்கள்.
இந்த குழுவின் அறிக்கை கிடைக்கப் பெற்றதும், தமிழ்நாட்டுக்கும்
புதுச்சேரிக்கும் எவ்வளவு புயல் நிவாரண உதவி வழங்கலாம் என்பது பற்றி
மத்திய அரசு முடிவு செய்யும்.
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger