சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்திருக்கும் சிவகார்த்திகேயன், தனது முதல் படம் வெளியாவதற்கு முன்பே இரண்டாவது படத்தின் வாய்ப்பையும் பெற்றிருக்கிறார். இது அதிகம் பேருக்கு வாய்க்காத ஒன்று என்றாலும், விஜய், அஜீத் என்று பெரிய பெரிய ஹீரோக்களை வைத்து இயக்கிய ஒரு இயக்குநரின் படத்தில் தனது இரண்டாவது வாய்ப்பை பெற்றிருக்கும் சிவகார்த்திகேயனுக்கு சனிபெயர்ச்சி நன்றாகவே வேலை செய்கிறதுபோல.
துள்ளாத மனமும் துள்ளும், தீபாவளி உள்ளிட்ட மாபெரும் வெற்றிப் படங்களை கொடுத்த எழில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'மனம் கொத்திப் பறவை' என்ற படத்தை இயக்குகிறார். இதில்தான் சிவகார்த்திகேயன் ஹீரோவாக ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இயக்கம் மட்டும் இன்றி இப்படத்தில் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்திருக்கும் எழிலிடம், ஏன் தயாரிப்பாளர் ஆனீர்கள்? என்று கேட்டால், கதையை நம்பித்தான் என்று பணிவுடன் கூறும் எழில், "சர்வர் சுந்தரம், பலே பாண்டியா போன்றப் படங்களைப் போல இப்படமும் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய ஒரு நகைச்சுவைப் படமாகவும், அதே சமயம் ஒரு காதல் படமாகவும் இருக்கும். இப்படத்தின் கதையில் உள்ள நம்பிக்கையால்தான் படத்தில் பெரும்பாலான புதுமுகங்களை அறிமுகப்படுத்துகிறேன்." என்றார்.
இதில் ஹீரோவாக நடிக்கும் சிவகார்த்திகேயனின் விஜய் டிவியின் நகைச்சுவை நாயகன் என்பது அனைவருக்கும் தெரியும். அதே வேலையை படப்பிடிப்பு தளத்திலும் செய்துகொண்டிருக்கிறாராம். எந்த ஒரு டென்ஷனான நேரத்திலும் தனது ஜோக்குகளின் மூலம் குபீரென்று சிரிக்க வைத்துவிடும் இவர், இப்படத்தில் வில்லனாக நடிக்கும் ரவி மரியாவையும் அவ்வப்போது தனது ஜோக்குகள் சிரிக்க வைத்து கூல் படுத்திக் கொண்டிருக்கிறாராம்.
Post a Comment