தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி வரும் படம் ' 3 '. இப்படத்திற்கு அனிருத் என்ற புதுமுக இசையமைப்பாளர் இசையமைத்து வருகிறார். டிசம்பர் மாதம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் , ஜனவரி மாதம் படத்தினையும் வெளியிட தீர்மானித்து இருக்கிறார்கள்.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள ' WHY THIS கொலவெறி கொலவெறிடி? ' என்ற பாடல் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. படக்குழு எப்படி அந்த பாடல் அதற்குள் வெளியானது என்று அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.
இந்நிலையில் இப்பாடல் ROUGH CUT எனப்படும் முழுமை பெறாத நிலையில் தான் வெளியாகியுள்ளது. பாடல் வரிகள் அனைத்துமே இளைஞர்களை கவர்ந்துள்ளது.
இதனால் ஓரிரு நாட்களில் ' WHY THIS கொலவெறி கொலவெறிடி?' முழுமையான பாடலை மட்டும் வெளியிட தீர்மானித்து இருக்கிறார்கள். ROUGH CUT முறை பாடலே வரவேற்பை பெற்று இருப்பதால், முழுவடிவம் அடங்கிய பாடலும் வரவேற்பை பெறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது படக்குழு.
இது குறித்து தனுஷ் தனது டிவிட்டர் இணையத்தில் " ' 3 ' படத்தின் ஒரு பாடல் புதன்கிழமை வெளியாகிறது. இணையத்தில் வெளியாகி இருக்கும் ' WHY THIS கொலவெறி கொலவெறி டி? ' பாடல் ஒரிஜினல் பாடலோடு ஒப்பிடும் போது வெறும் 2% மட்டுமே. யார் அப்பாடலை வெளியிட்டார்களோ.. அவர்களுக்கு நன்றி... நாங்களே கூட இவ்வளவு விளம்பரப்படுத்தி இருக்க மாட்டோம்.." என்று தெரிவித்துள்ளார்.
'மயக்கம் என்ன' படத்தில் சில பாடல்களை எழுதிய தனுஷ், '3' படத்தின் அனைத்து பாடல்களையும் தனுஷ் எழுதி இருக்கிறார்.
Post a Comment