சந்தியாவும், பாக்யராஜ் மகன் சாந்தனுவும் காதலிப்பதாக கிசுகிசுககள் பரவியது. விரைவில் திருமணம் நடக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. சந்தியா படங்கள் சரியாக ஓடவில்லை என்றும் அவர் மார்க்கெட் சரிந்து விட்டதாகவும் செய்திகள் வெளியாயின. பெரிய ஹீரோக்கள் படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் அமைய வில்லை. இவற்றுக்கு பதில் அளித்து சந்தியா கூறியதாவது:-
எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன. எல்லாவற்றையும் ஒப்புக் கொள்ளவில்லை. நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்கிறேன். எனக்கு மார்க்கெட் சரிந்து விட்டதாக கூறுவது தவறு. மலையாளத்தில் சிறந்த படங்களில் நடித்து வருகிறேன். எனக்கும், சாந்தனுக்கும் காதல் என்று தொடர்ந்து கிசுகிசுக்கள் வருகிறது. நாங்கள் இருவரும் நண்பர்கள். எங்களுக்குள் காதல் இல்லை. நேரம் வரும்போது திருமணம் பற்றி எனது பெற்றோர் முடிவு எடுப்பார்கள்.
Post a Comment