பிரகாஷ்ராஜ் கூறியது: நான் உள்பட வேறு எந்த நடிகர்களும் தமிழ் சினிமாவுக்காக கடந்த 10 வருடத்தில் எதையுமே செய்யவில்லை. இது கசப்பான உண்மை. ஆனாலும் தமிழ் சினிமா மற்றவர்களால் மதிக்கப்படுகிறது. அதற்கு காரணம் புதிய இயக்குனர்கள். அவர்களது திறமையால் புதிய களங்களில் படங்கள் வருகிறது. நடிகர்களை தவிர இசை அமைப்பாளர்கள் முதல் கதாசிரியர்கள் வரை ஏதாவது ஒரு புது முயற்சியை வெளிப்படுத்துகிறார்கள்.
இதில் ரசிகர்களும் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். இப்படி சொல்வதால் என் மீது நடிகர்கள் கோபப்படாமல் கமர்சியல் நோக¢கத்தை கைவிட்டு, புதிய முயற்சிகளை தர முன்வர வேண்டும். என் மகள் 10ம் வகுப்பு படிக்கிறாள். அவளுக்கு நிறையவே படிப்பு சுமைகள். வாழ்க்கை என்பது படிப்பு மட்டுமல்ல. அதையும் தாண்டி நிறைய சாதிக்க வேண்டி இருக்கிறது. இதைத்தான் நான் இயக்கும் 'டோனி' படம் விளக்கப் போகிறது.
Post a Comment