News Update :
Home » » கமலா தியேட்டரில் ஏழாம் அறிவு தூக்கப்பட்டு வேலாயுதமா! தியேட்டர் நிர்வாகம் பதில்

கமலா தியேட்டரில் ஏழாம் அறிவு தூக்கப்பட்டு வேலாயுதமா! தியேட்டர் நிர்வாகம் பதில்

Penulis : karthik on Wednesday, 2 November 2011 | 22:40

 
 
 
கமலா திரையரங்கில் ஏழாம் அறிவு படம் எடுக்கப்பட்டு அங்கே, வேலாயுதம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியானதை அந்த தியேட்டர் நிர்வாகம் மறுத்துள்ளது.
 
தீபாவளியை முன்னிட்டு ஏழாம் அறிவு படம் வெளியானது. அதற்கு போட்டி என்று சொல்லும் வகையில் விஜய் நடித்த வேலாயுதம் வெளியானது.
 
இந்த நிலையில் ஏழாம் அறிவு படத்தை கமலா தியேட்டரில் எடுத்துவிட்டு, வேலாயுதம் திரையிடப்பட்டதாகவும், இதனால் விஜய் ரசிகர்கள் மொட்டை போட்டு காவடி தூக்கி ஊர்வலம் நடத்தி அதைக் கொண்டாடியதாகவும் செய்தி வெளியானது.
 
இதை மறுத்து கமலா தியேட்டர் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
 
அந்த அறிக்கையில், "எங்கள் கமலா திரையரங்கில் 7ஆம் அறிவு படம் முதல் வாரத்தின் 2 திரையரங்கில் திரையிட ஒப்பந்தம் செய்திருந்தோம். 3-ம் வாரத்தில் இருந்து "ஒப்பந்தப்படி ஸ்கிரீன் 1-ல் 7 ஆம் அறிவும், ஸ்கிரீன் 2-ல் வேலாயுதம் திரையிடப்படமும் திரையிடப்பட்டு 2 படங்களும் எங்கள் திரையரங்கில் வெற்றிகரமாக ஒடிக் கொண்டிருக்கின்றன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்," என்று குறிப்பிடப்பட்டு உள்ளது,
 
இலங்கையில் வசனங்கள் நீக்கம்
 
இதற்கிடையே, ஏழாம் அறிவு படத்தில் தமிழருக்கு ஆதரவாக வரும் வசனங்களை நீக்கிவிட்டு இலங்கையில் படம் வெளியிட்டுள்ளனர்.
 
இலங்கையில் தமிழன் தோற்றதற்கு காரணம் சில நாடுகளின் கூட்டு சதிதான் என்பன போன்ற வசனங்கள் இடம்பெற்று உள்ளன. ஒருத்தனை ஒன்பது நாடுகளஷ் சேர்ந்து தாக்குவது வீரமா என்ற வசனமும் இடம்பெற்றுள்ளது. இதற்கு இலங்கையில் எதிர்ப்பு கிளம்பியது. அங்கு இப்படத்தை வெளியிட அனுமதி மறுத்து மறு தணிக்கைக்கு அனுப்பினர்.
 
சிங்களர்களுக்கு எதிராகவும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும் இருந்த வசனங்களை நீக்கிய பிறகே படத்தை இலங்கையில் வெளியிட அனுமதித்தனர்.



Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger