ஆச்சி மனோரமாவுக்கு அடிபட்டிருக்கிறது என்றால் சினிமா இன்டஸ்ட்ரி கொஞ்சம் ஷேக் ஆகதான் செய்யும். காலையில் வந்த செய்தி ஆச்சியின் அருமை பெருமை அறிந்த பலருக்கும் பேரதிர்ச்சி. பாத்ரூமில் வழுக்கி விழுந்து தலையில் பலத்த காயம் என்று செய்தி தாள்கள் அலறின. என்னதான் ஆனது மனோரமாவுக்கு?
பயப்படும்படியாக எதுவும் இல்லையாம். அவர் வழுக்கி விழுந்தது இப்போதல்ல. ஒரு மாதத்திற்கு முன்புதான். அப்போது நெற்றியில் லேசாக ரத்தம் கட்டியிருந்ததாம். மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே முதலுதவி செய்து கொண்டாராம் அவர். சில தினங்களுக்கு முன் அடிபட்ட அதே இடத்தில் லேசாக வலி ஏற்பட, மருத்துவமனைக்கு சென்றாராம். மனோரமாவின் பேரன் ராஜராஜன் ஒரு மருத்துவர் என்பதால் அவரேதான் ஆச்சிக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.
முன்பு காயம் ஏற்பட்ட இடத்தில் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. அதற்கான சிகிச்சையில்தான் இருக்கிறார் அவர். இதற்கிடையில் அவரை பார்க்க வரும் பார்வையாளர்கள் சகட்டுமேனிக்கு உள்ளே வந்ததால் மனோரமாவுக்கு இன்பெக்ஷன் ஏற்பட்டு ஜுரம் வந்திருப்பதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக அவரை சந்திக்க வருகிற அத்தனை பேரையும் மருத்துவமனை வாசலிலேயே தடுத்து அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள் உறவினர்கள்.
Post a Comment