அந்த தாத்தாவிற்கு எப்போதும் வீட்டில் ஒரு மரியாதை உண்டு. டைட்டில் போட்டு முடிக்கும் போது அவர் இறந்து விட குடும்பத்தில் கடுமையான குழப்பம் ஏற்படுகிறது. அந்த வீட்டில் இருக்கும் ஹீரோயின் கடுமையாக பாதிக்கப்படுகிறார். அப்போது இவருக்கு துணையாக ஒரு பெண்மணி தோழியாக படத்தில் நுழைகிறார்.
இந்த இடத்தில் இசையோடு வரும் "நீங்கள் நல்லா இருக்கோணும் நாடு முன்னேற..." என்ற பாட்டு தாளம் போட வைக்கிறது.
கொலைவெறியுடன் அடித்துக் கொண்ட குடும்பமும் கொஞ்ச நாளில் முன்பு போல ஒன்று சேர, குடும்பத்தில் தோழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறர் ஹீரோயின். இதனால் குடும்பத்தில் உள்ள சின்ன பசங்க கடும் கோபத்தில் இருக்க அதை எல்லாம் கவலை படாமல் ஹீரோயின் தோழியுடன் இருக்க பலர் விமர்சிக்கவும், கிண்டலுக்கும் பயப்படாமல் தன்னுடைய பிடிவாதத்தைக் காட்டுகிறார். கோவில் கோர்ட் குளம் என்று எங்கே போனாலும் சின்ன பசங்களை விட்டுவிட்டு தோழியுடனேயே போகிறார்.
ஒரு கட்சியில் பிடிவாதத்தைக் காட்டுவதற்கு தோழியின் உறவினரை தன்னுடைய பிள்ளையாகப் பாவித்துத் தத்து எடுக்கிறார். இந்த இடத்தில் இந்த தீடீர் திருப்பம் யாரும் எதிர்பார்க்காத போது வைத்தது இயக்குனரின் சாமர்த்தியம். இந்த திருமணத்தை காட்டியவிதம் பலரை ஆச்சரியப்பட வைக்கிறது. ஷங்கர் படம் போல பிரமாண்டமாக இந்த திருமணத்தை எடுத்துள்ளார். திருமணத்துக்கு போடப்பட்டிருக்கும் செட் பிரமாதமாக இருக்கிறது - ஆர்ட் டைரக்டருக்கு சபாஷ்!.
விதவிதமான நகை, செருப்பு என்று கம்பியூட்டர் கிராபிக்ஸில் காண்பித்துள்ளார்கள்.
சில வருடங்களுக்குப் பிறகு சின்ன சண்டை வர சில பல சின்னப் பசங்க எல்லாம் பக்கத்துவீட்டு மஞ்சள் துண்டு தாத்தாவை சப்போர்ட் செய்ய குடும்ப சொத்து அவருக்கு போகிறது. பிறகு அந்த வீடு அலங்கோலமாகிறது. வீட்டை காண்பித்துவிட்டு அப்படியே கூவத்தை காட்டியது பல வசங்களுக்குச் சமானம்.
சில மாதங்களில் தாத்தாவின் பசங்கள் வீட்டை மூன்றாக பிரிக்க, சின்ன பசங்க விளையாடும் இடம், அவர்களுடைய பொம்மை செல்போன் ஆகியவற்றை இவர்கள் அபகரிக்க, மீண்டும் சண்டை வர குடும்பத்தில் ஹீரோயின் தலைவர் ஆகிறார். சுபம் என்று போடும் இடத்தில் இயக்குனர் யாரும் எதிர்ப்பாக்காத திருப்பதை வைக்கிறார். ஹீரோயின் தோழியை வீட்டை விட்டு விரட்டுகிறார்
குணசித்திர நடிகராக வரும் நம்பர் ஓபி சில காட்சியிலே வந்தாலும் தன் பார்த்திரம் உணர்ந்து அடக்கமாக நன்றாக நடித்துள்ளார். இவருக்கு தமிழ் திரைப்பட உலகத்தில் நல்ல எதிர்காலம் இருக்கு. டென்ஷனான வில்லன் போல எப்போதும் நட நட என்று நடக்கும் ராஜனுக்கு சரியான ரோல் கொடுக்காமல் படத்தில் அவரை வீண் செய்துள்ளார்கள்.
வீடியோ கடை வைத்திருப்பது போல ஹீரோயினுடைய தோழியை காண்பித்தது லாஜிக்கில் பெரிய ஓட்டை. இந்த காலத்தில் எல்லோரும் டவுன்லேட் செய்து தான் படம் பார்க்கிறார்கள், அப்படி இருக்க வீடியோ கடை எல்லாம் வைத்திருப்பது என்ன லாஜிக் ?
காமெடி டிராக் என்று தனியாக படத்தில் இல்லை என்றாலும், அடிக்கடி எல்லோரும் எங்கோ இருக்கும் ஒரு சிங்கிற்கு தந்தியும், கடிதமும் எழுதுவது நல்ல தமாஷ்! படம் ஆரம்பிக்கும் போது சிங் வீட்டில் இருக்கும் குப்பை தொட்டி இங்கிருந்து போகும் கடிததிற்கு பிறகு பெரிதாவதாக காண்பிப்பது வயிறு குலுங்க வைக்கிறது.
பாலிவுட் கிழவர் 6 விக்கெட் எடுத்தால் கோலிவுட் அம்மா 12 விக்கெட்டை எடுக்க முடியும் என்ற வசனத்துக்கு தியேட்டரில் பலத்த கைத்தட்டல் !
இட்லிவடை மார்க் - (-)/(:>)
A separation - விரைவில் கூடல் :-)
Post a Comment