பிரபல இந்தி நடிகை வித்யாபாலன். இவர் `த தர்டி பிக்சர்ஸ்' என்ற பெயரில் தயாரான படத்தில் ஆபாசமாக நடித்துள்ளார். மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா வாழ்க்கை இதில் படமாக்கப்பட்டு உள்ளது.
சில்க்ஸ்மிதாவின் சினிமா பிரவேசம், நடிகர்கள் அவரை தவறாக பயன்படுத்தியது, காதல் தோல்வி, இறுதியில் தற்கொலை என சில்க் ஸ்மிதா வாழ்வில் நடந்த அனைத்து சம்பவங்களும் இதில் இடம் பெற்றுள்ளன. இதில் வித்யாபாலன் பல ஆண்களுடன் ஆபாசமாக இருப்பது போன்ற படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
படத்தை ரிலீஸ் செய்ய தடை விதிக்க கோரி சில்க் ஸ்மிதா உறவினர்கள் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். ஆனால் அது தள்ளுபடி செய்யப்பட்டு படம் கடந்த வாரம் ரிலீசானது.
இதற்கிடையில் இப்படத்தில் வித்யாபாலன் ஆபாசமாக நடித்துள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் ஆந்திராவைச் சேர்ந்த சாய்கிருஷ்ணா, ஸ்ரீநிவாஸ் ஆகியோர் ஐதராபாத் நாம்பள்ளியில் உள்ள கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
பெண்களை கேவலப்படுத்தும் வகையில் வித்யாபாலன் ஆபாசமாக நடித்துள்ளார் என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தனர். படத்தின் இயக்குனர் மிலன், தயாரிப்பாளர் ஏக்தா கபூர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவும் கோர்ட்டில் வற்புறுத்தப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நடிகை வித்யாபாலன் மீது வழக்குப்பதிவு செய்யும்படி நல்லகுண்டா போலீசாருக்கு உத்தர விட்டார். வருகிற 31-ந் தேதிக்குள் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படியும் நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டு உள்ளார்.
இதையடுத்து வித்யாபாலன் கைதாகலாம் என இந்தி, தெலுங்கு திரையுலகம் பரபரப்பாக எதிர்பார்க்கிறது.
Post a Comment