2011ம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் ஜூன் 15ம் தேதி ஏற்பட்டது. மேகமூட்டம் காரணமாக இந்தியாவில் இக்கிரகணத்தை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், இந்த ஆண்டின் 2வது முழு சந்திர கிரகணம் நாளை மறுதினம் (டிச.10) ஏற்படுகிறது. மாலை 6.15 மணிக்கு தொடங்கும் சந்திர கிரகணம், இரவு 9.48 மணி வரை நீடிக்கிறது. மேலும், முழு சந்திர கிரகணம் சரியாக இரவு 7.36 மணிக்கு தொடங்கி 8.28 மணி வரை 51 நிமிடம் நீடிக்கிறது.
இந்த கிரகணத்தை கொல்கத்தா உள்ளிட்ட பெரும் பகுதியில் பார்க்க வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். கிரகணத்தன்று இரவு 9 மணிக்கு பிறகு முழு விரதம் கடைப்பிடிப்பது நல்லது.
இரவு 10 மணிக்கு பிறகு குளித்துவிட்டு பூஜை செய்து சாப்பிடுவது சிறந்தது. கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் பழம் சாப்பிடலாம்.
வீடுகளில் மாலை 5.30 மணிக்கு தீபம் ஏற்ற வேண்டும். அந்த தீபம் அணையாமல் பார்த்து கொள்ள வேண்டும். கர்ப்பிணி பெண்கள் மதியம் 3 மணிக்கு பின் வெளியே போகக் கூடாது. இல்லையென்றால் அவர்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.
ஜோதிடர்களின் இந்த கருத்தை கேட்டு கர்ப்பிணி பெண்கள் அதிர்ச்சியடைய தொடங்கியுள்ளனர். இந்த தகவல் ஆங்காங்கே பரவியுள்ளதால் கர்ப்பிணி பெண்கள் பீதியில் உள்ளனர்.
Post a Comment