News Update :
Home » » நீண்ட காலம் வாழ்வதற்கான ரகசியங்கள்

நீண்ட காலம் வாழ்வதற்கான ரகசியங்கள்

Penulis : karthik on Saturday, 31 December 2011 | 03:30

இந்த உலகத்தில் பிறந்த அனைவருமே நீண்ட காலம் வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றனர்.
ஆனால் அதற்கான வழி தெரியாமல் யாரெல்லாம் நீண்ட ஆயுளுக்கு வழி கூறுகிறார்களோ அதைத் தேடி அலைகின்றனர் அல்லது அவர்கள் கூறும் வழிகளைப் பின்பற்றுகின்றனர்.
ஆனால் நீண்ட ஆயுளுக்கான வழி அவரவர்களிடம் தான் உள்ளது என்ற ரகசியம் பலருக்கும் புரிவதில்லை. இதைத்தான் லண்டனைச் சேர்ந்த உளவியல் பேராசிரியர் ஆண்ட்ரூ ஸ்டெப்டோ ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளார்.
அவரது ஆராய்ச்சியின் முடிவு என்ன தெரியுமா? மகிழ்ச்சியாக இருந்தால் நீண்ட காலம் வாழலாம் என்பதுதான் அது. அட இது தெரியாதா என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதை ஆராய்ச்சி மூலம் நிரூபித்துள்ளார் ஸ்டெப்டோ.
தனது ஆராய்ச்சிக்கு அவர் தேர்ந்தெடுத்தவர்கள் அனைவருமே 52 வயது முதல் 79 வயதுக்குள்பட்டவர்கள். சுமார் 4 ஆயிரம் பேரிடம் ஐந்து ஆண்டுகளாக மேற்கொண்ட தொடர் ஆராய்ச்சியின் முடிவை கட்டுரையாக வெளியிட்டுள்ளார் ஸ்டெப்டோ.
இதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் எல்லாம் நல்ல சிந்தனை உள்ளவர்களுக்கு மன இறுக்கம் குறைவதற்கான ஹோர்மோன் சுரப்பை கட்டுப்படுத்துவதாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதாகவும் தெரிவித்தன.
ஆனால் பேராசிரியர் ஸ்டெப்டோவின் ஆராய்ச்சி முடிவுகள் எப்பவும் மகிழ்ச்சியாக இருப்பவர்களுக்கு உடல் ஆரோக்கியமாக இருப்பது நிரூபணமாகியுள்ளது. ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்ட 4 ஆயிரம் பேரிடமும் தினசரி நான்கு முறை அவர்களது மனோ நிலை எப்படி என்று கேட்கப்பட்டு அதற்கான விடை பதிவு செய்யப்பட்டது.
இவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக ஆராய்ச்சிக்கு உள்படுத்தப்பட்டனர். ஆராய்ச்சியின்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் கணக்கிடப்பட்டு அவர்களது மனோ நிலையும் ஆராய்ச்சிக்குள்படுத்தப்பட்டது.
ஒவ்வொருவரின் வயது, பாலினம், மன இறுக்கம், அவர்களுக்கு இருந்த நோய்கள், உடலியல் சார்ந்த நடவடிக்கைகள் ஆகியன ஆராயப்பட்டன. இதில் மகிழ்ச்சியாக இருந்தவர்களுக்கு எவ்வித நோயும் அண்டவில்லை. மேலும் இத்தகையோர் குறைந்த வயதில் உயிரிழப்பதும் இல்லை என்பது அறியப்பட்டது.
இதிலிருந்து உடலியல் ரீதியிலான மாற்றம் சந்தோஷமாக இருப்பவர்களிடையே இருப்பது புலனாகியுள்ளது. இதனால் அவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வது புரிந்தது என்று ஸ்டெப்டோ தனது ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார்.
மன இறுக்கத்துக்குக் காரணமான கார்டிசால் எனும் ஹார்மோன் சுரப்பு இவர்களுக்குக் குறைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். போதும் என்ற மனதுடன் இருப்பவர்கள் நீண்ட ஆயுளுடன் இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger