பிகானிர்:ராஜஸ்தான் மாநிலத்தில் தங்கியிருந்த பாகிஸ்தான் பெண்ணுக்கு, வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.ராஜஸ்தான் மாநிலம், பிகானிர் மாவட்டத்தில் உள்ள கேஜேடி என்ற கிராமத்தில், கடந்த 1986ல் முதல் அலாபாசாய் என்ற பாகிஸ்தானைச் சேர்ந்த பெண், நீண்ட கால விசாவில் தங்கியுள்ளார். அதே கிராமத்தைச் சேர்ந்தவரை அவர் திருமணம் செய்துள்ளார். எனினும், அவருக்கு இன்னும் இந்திய குடியுரிமை வழங்கப்படவில்லை.
இந்நிலையில், அண்மையில், போலீசார் செய்த வழக்கமான ஆய்வின் போது, கடந்த 2008ம் ஆண்டு முதல் அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அந்த பெண்ணின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து கடந்த மாதம் நீக்கப்பட்டது. இதுதொடர்பாக, அலாபாசாய்க்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதேபோன்று, வெளிநாடுகளைச் சேர்ந்த வேறு யாருக்காவது, வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்த, மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த பெண்ணுக்கு, வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Post a Comment