ஐஸ்வர்யாராயின் குழந்தைக்கு விரைவில் பெயர்சூட்டு விழா நடத்தப்படும் என்று அமிதாப்பச்சன் கூறினார். முன்னாள் உலக அழகியும், இந்திய நடிகையுமான ஐஸ்வர்யாராய்க்கும், அமிதாப்பச்சன் மகன் அபிஷேக்பச்சனுக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஐஸ்வர்யாராய் பிரசவத்துக்காக மும்பையில் உள்ள பிரபல ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
கடந்த வாரம் சுகப்பிரசவம் மூலம் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. ஐஸ்வர்யாராய் மற்றும் குழந்தையை அமிதாப்பச்சன் நேற்று வீட்டுக்கு அழைத்து வந்தார்.
நன்றாக உள்ளனர் பின்னர் அமிதாப்பச்சன் கூறியதாவது:-
ஐஸ்வர்யாராய்க்கு சுகப்பிரசவம் மூலம் குழந்தை பிறந்தது. அவர் 3 மணி நேரம் பிரசவ வேதனையில் துடித்த போதும் சுகப்பிரசவம்தான் நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். சிசேரியனுக்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை. ஐஸ்வர்யாராய்யையும், குழந்தையையும் இன்று (நேற்று) வீட்டுக்கு அழைத்து வந்து விட்டேன். இருவரும் நன்றாக ஆரோக்கியமாக உள்ளனர். லட்சுமி வந்து விட்டாள் ஐஸ்வர்யாராய்க்கு பெண் குழந்தை பிறந்ததில் எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சி தான். குழந்தை ஐஸ்வர்யா ஜாடையில் உள்ளது.
எங்கள் குடும்பத்துக்கு லட்சுமி வந்து விட்டாள். முதலில் குழந்தைக்கு `பிர தீட்சை' கொடுக்க வேண்டும். அதன் பிறகு தான் குழந்தைக்கு பெயர் சூட்டப்படும். பெயர் சூட்டு விழா விரைவில் நடத்தப்படும். ஆனால் அது ஆடம் பரமாக இருக்காது. ஆங்கிலத்தில் `ஏ' என்ற எழுத்தில் தொடங்கும் வகையில் குழந்தைக்கு பெயர் சூட்டப்படும்.
இவ்வாறு அமிதாப்பச்சன் தெரிவித்தார்.
Post a Comment