தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார் த்ரிஷா. த்ரிஷா ஹைதராபாத்தில் ஐந்து நட்சத்திர ஒட்டல் ஒன்றை கட்டி வருவதாகவும், தெலுங்கானா பிரச்னையால் அவரால் அப்பணிகளை தொடர முடியாமல் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இத்தகவல் குறித்து த்ரிஷா " ஒட்டல் கட்டுவதாக வந்துள்ள செய்தி வெறும் வதந்தி மட்டுமே. ஓட்டல் கட்டுவது நல்ல விஷயம்தான். அப்படி உண்மையிலேயே நான் கட்டினால், அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்வேன். எப்போதுமே ஓட்டல் கட்டும் எண்ணம் எனக்கு இல்லை." என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் " தற்போது தமிழில் விஷால் ஜோடியாக 'சமரன்', தெலுங்கில் வெங்கடேஷுடன் ஒரு படம் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறேன். தமிழ், தெலுங்கில் மேலும் இரண்டு படங்களில் ஒப்பந்தமாக இருக்கிறேன். ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வருவதால், கன்னடம் மற்றும் மலையாள படங்களில் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை. " என்று தெரிவித்துள்ளார்.
Post a Comment