இணையதளங்களில் 7 ஆம் அறிவையும் வேலாயுதத்தையும் பிரித்து மேய்ந்து கொண்டிருக்கிறார்கள் ரசிகர்களும் எழுத்தாளர்களும். இதில் 7 ஆம் அறிவு பற்றி அவர்கள் எழுப்பி வரும் வினாக்களுக்கு சில வரிகளில் விடையளித்திருக்கிறார் அப்படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின்.
இப்படத்தை தெலுங்கில் டப்பிங் செய்திருக்கிறார்கள். அதில் போதிதர்மரை கடப்பாவில் பிறந்தவராகவோ, ராயலசீமாவில் வளர்ந்தவராகவோ காட்டுவார்களோ என்று அவர்கள் சந்தேகத்தை எழுப்பியிருந்தார்கள். இதற்கெல்லாம்தான் சுருக்கென்று பதில் சொல்லி, லொட லொடக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் உதயநிதி.
என்னவாம்? சிலர் வதந்திகளை கிளப்புவது போல, தெலுங்கு டப்பிங்கில் அவரை தெலுங்கராக நாங்கள் காட்டவில்லை. அதிலும் அவர் காஞ்சிபுரத்தில் பிறந்த தமிழர் என்றே சித்தரித்திருக்கிறோம். இனிமேலாவது இதுபற்றி வதந்திகள் எழாமலிருக்கட்டும் என்று கூறியிருக்கிறார்.
சொல்லியாச்சுல்ல? உடைஞ்சா முருங்கை, வளைஞ்சா நாணல்னு போயிகிட்டே இருக்க வேண்டியதுதான்.
Post a Comment