News Update :
Home » » சிதம்பரம் தான் காரணம்-பாஜக: சிதம்பரம் தான் காரணம்- ராம்தேவ்

சிதம்பரம் தான் காரணம்-பாஜக: சிதம்பரம் தான் காரணம்- ராம்தேவ்

Penulis : karthik on Wednesday 28 September 2011 | 05:44

 
 
 
தெலுங்கானா பிரச்சனைக்கு மத்திய உள்துறை அமைச்சர் . சிதம்பரம் தான் காரணம் என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
 
இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது,
 
ஆந்திர மாநிலத்தில் பெரும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. 10 மாவட்டத்தில் நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது. அங்கு உள்ள சூழ்நிலை முற்றிலுமாக மாறிவிட்டது. தெலுங்கானா தனி மாநிலம் கேட்டு போராட்டங்கள் நடந்து வருகிறது. இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் . சிதம்பரம் தான்.
 
கடந்த 2009-ம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி தெலுங்கானாவை தனி மாநிலமாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் தானே அறிவித்தார். அந்த அறிவிப்பால் தான் இவ்வளவு பிரச்சனை.
 
காலத்தை தாழ்த்த தான் தெலுங்கானா தனி மாநிலமாக்கும் சாத்தியத்தை பற்றி அறிய நீதிபதி பி. ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. தெலுங்கானாபிரச்சனைக்கு காங்கிரஸ் பொறுப்பேற்குமா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
2ஜி: சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரும் பாஜக
 
2ஜி விவகாரம் தொடர்பாக . சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமரை பாஜக வலியுறுத்தியுள்ளது.
 
இது குறித்து பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியதாவது,
 
கடந்த மே மாதம் 22-ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியும் ஊழலை எதிர்த்து போராடப்போவதாக அறிவித்தனர். ஆனால் ஊழல் அமைச்சர்களை காப்பாற்றிக் கொண்டு எப்படி ஊழலை எதிர்த்து போராட முடியும்?
 
நிதியமைச்சகம் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பிய கடித்தத்தில் .சிதம்பரத்திற்கு 2ஜி ஊழலில் தொடர்பு இருக்கிறது என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. சிபிஐ கூட அரசுடன் சேர்ந்து கொண்டு சிதம்பரத்திடம் விசாரணை நடத்தத் தேவையில்லை என்று கூறுகிறது.
 
பிரதமர் ஊழல் செய்த அமைச்சரை எல்லாம் காப்பாற்றக்கூடாது என்றார்.
 
எனது ஆதரவாளர் மரணத்திற்கு சிதம்பரம் தான் காரணம்: ராம்தேவ்
 
டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கச் சென்ற யோகா குரு பாபா ராம்தேவ் ஆதரவாளர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில் படுகாயமடைந்த ஹரியானாவைச் சேர்ந்த ராஜ் பாலா(51) கடந்த 3 மாதங்களாக கோமாவில் இருந்தார். இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
 
அவர் இறந்ததற்கு . சிதம்பரம் தான் காரணம் என்றும், அதற்காக அவருக்கு மரண தண்டனை கொடுக்கலாம் என்றும் பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.
 
கடந்த 20-ம் தேதி வீரமங்கை ராணி லக்ஷ்மிபாய் பிறந்த ஊரான ஜான்சியில் இருந்து ராம்தேவ் சுயமரியாதை யாத்திரையை துவங்கினார். இதற்கிடையே ராஜ்பாலா மரணச் செய்திகேட்டு அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள அவர் ஹரியானா சென்றார்.
 
2ஜி பற்றி ராம்தேவிடம் கேட்டபோது, நான் வேறு சொல்லவேண்டுமா. அதுதான் 2ஜி ஊழலுக்கு யார் காரணம் என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி உலகிற்கு காட்டிவிட்டாரே என்றார்.
 
 


Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger