News Update :
Powered by Blogger.

சூர்யா நடிப்பில் வெளியான ரத்த சரித்திரத்தின் நிஜ ஹீரோவை சுட்டுக்கொன்றவன் கைது

Penulis : karthik on Sunday, 22 April 2012 | 05:25

Sunday, 22 April 2012




நடிகர் சூர்ய� � நடித்த படம் 'ரத்த சரித்திரம்'. ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்ட அரசியல் 'தாதா'க்களின் பழி வாங்கும் கொலையை மையமாக கொண்டு ராம்கோபால் வர்மா இந்த படத்தை தயாரித்தார்.
 
தமிழ், தெலுங்கிலும் 'ரத்த சரித்திரம்' படம் எடுக்கப்பட்டு ஒரே நாளில் ரிலீஸ் ஆனது.  முன்னாள் அமைச்சரின் கொலை வெறியால் குடும்பத்தையே இழந்த சூரி என்கிற சூரிய நாராயணரெட்டி என்ற கதாபாத்திரத்தில் சூர்யா நடித்து இருந்தார். இவரது மனைவியாக பிரியாமணியும், அரசியல்வாதியாக விவேக் ஓபராயும் நடித்து இருந்தனர். ஆந்திராவில் இந்த படம் பரபரப்பாக ஓடியது. இந்த படம் ரிலீசான சில வாரங்களில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த உண்மையான சூரிய நாராயணரெட்டி அவரது நண்பரும், ரவுடியுமான பானுகிரண் என்பவரால் சுட்டுக்கொல்லப்பட� ��டார்.
 
அவரது குடும்பத்துக்கு நடிகர் சூர்யாவும் இரங்கல் தெரிவித்து இருந்தார்.   சூரியின் லட்சக்கணக்கான சொத்தை பானுகிரண் சுருட்டியதாகவும் இதற்காக அவனை பழிவாங்க நினைத்த சூரியை பானுகிரண் நைசாக காரில் அழைத்துச்சென்று கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகவும் கூறப்பட்டது.
 
பின்னர் ரூ.4 லட்சம் பணத்து� ��ன் அவன் தலைமறைவானான். சூரி கொலைக்கு உடந்தையாக இருந்த மதுசூதனன்ரெட்டி, மன்மோகன் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் பானு கிரண் மட்டும் தலைமறைவாக இருந்தான். அரசியல்வாதிகளின் அரவணைப்பில் அவன் இருப்பதாக ஆந்திராவில் பேசப்பட்டது.   இந்த நிலையில் 14 மாதங்களுக்கு பிறகு பானுகிரண் போலீசில் சிக்கி உள்ளான். ஐதராபாத் நகரில் அவன் பிடிபட்டதாகவும் சி.ஐ.டி. போலீஸ் அதிகாரி ர� �ண மூர்த்தி தெரிவித்தார். ரூ.4 லட்சம் பணத்துடன் அவன் பல்வேறு மாநிலங்களில் தலைமறைவு வாழ்க்கை நடத்தியதாகவும் பணம் காலியானதால் பூராபாத் வந்தபோது போலீசில் சிக்கி கொண்டதாகவும் அவர் கூறினார். கைதான பானுகிரண் ஐதராபாத் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு மே 4-ந்தேதி வரை காவலில் வைக்கப்பட்டான். 




comments | | Read More...

இந்திய எம்.பிகள் சொல்வதுபோல் ராணுவத்தை திரும்பப் பெற முடியாது: இலங்கை




இலங்கையின் வடக்குப் பகுதியான தமிழர்கள் வாழும் இடங்களில் இருந்து ராணுவம் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்ற இந்திய எம். பிக்களின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று இலங்கை அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இலங்கை சென்று திரும்பிய இந்திய குழுவில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் எம்.பிக்கள், யாழ்ப்பாணத்தில் சடங்குக்கும் சாவுக்கும் கூட ராணுவத்திடம் அனுமதி கேட்க வேண்டிய நிலை இ� ��ுக்கிறது. அதை மாற்ற வேண்டும் என்று ராஜபக்சேவிடம் சொன்னோம். அவர் உடனே நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு விட்டார் என்று வாய் ஜம்பம் பேசிக் கொண்டு வருகின்றனர்.

ஆனால் அவர்கள் தமிழ்நாட்டில் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போது, வடக்கில் இருந்து ராணுவத்தை விலக்கிக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என்ற சிங்களக் கொக்கரிப்பு வந்து � ��ிழுந்திருக்கிறது.

இவர்கள் போய் சந்தித்த அதே ராஜபக்சே அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் பந்துல ஜெயசேகர இது தொடர்பாக ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்துக்கு கருத்து தெரிவிக்கையில், "இந்திய எம்.ப� �க்களிடம் நாடு முழுவதும் தான் ராணுவத்தின் பிரசன்னம் இருக்கிறது. தமிழர்கள் வாழும் வடக்குப் பகுதியில் மட்டும் குவிக்கப்படவில்லை என்றுதான் ராஜபக்சே விளக்கம் அளித்தார்" என்று கூறியுள்ளார்.

மேலும் இந்திய எம்.பிக்கள் கோருவதுபோல் வடக்குப் பகுதியில் இருந்து மட்டும் ராணுவத்தை விலக்கிக் கொள்ள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

இப்படி இலங்கை மூக்கறுக்கும் நிலையில் அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் காங்கிரஸ் எம்.பிக்கள் என்ன பதில் சொல்கிறார்களோ?



comments | | Read More...

கோஷ்டி மோதலில் தி.மு.க.வை காப்பாற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: கி.வீரமணி அறிக்கை




திராவிடக் கழகத் தலைவர் கி. விரம� �ி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-  
 
திராவிடர் இயக்க நூறாவது ஆண்டு நடக்கும் இந்த முக்கியமான காலகட்டத்தில், தி.மு.க.வின் பொறுப்பாளர்களாக உள்ள பலரின் நடவடிக்கைகளைப் பற்றி ஏடுகளில், ஊடகங்களில் வரும் பல்வேறு செய்திகள் நம்மைப் போன்ற தாய்க்கழகத்திற்கும், உண்மையான திராவிடர் இயக்கப் பற்றாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் அளவற்ற, வார்த்தைகளில் வடிக்க முடியாத துன்பத்தையும், மனவேதனையும் தருகிறது.
 
ஏற்கனவே தி.மு.க.வை அழிப்பதே தமது பிறவிப்பயன் என்ற ஊடகங்களுக்கு அவல் பாயாசம் சாப்பிட்டதுபோல சில நிகழ்வுகள் கிடைப்பதோடு விரிசல் என்று ஏகமாக விளம்பரப்படுத்தி, கட்டடத்தையே, கட்டுமானத்தையே காணாமல் போகச்செய்ய இத்தருணத்தை விட்டால் வேறு நல்ல தருணம் வாய்க்காது எ� �்று கருதி, பரபரப்புப் பசியைத் தீர்த்துக் கொள்ளுகின்றன.  
 
அய்யா அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் கூறிய அறிவுரை கல்லில் செதுக்கியதாகும். தி.மு.க.வை எதிரிகளால் அழிக்க முடியாது. இவர்களே ஒருவருக்கொருவர் அழித்துக் கொண்டால்தான் முடியும். தி.மு.க. கெட்டியான பூட்டு, அதற்குக் கள்ளச்சாவி போட்டுவிட யாரையும் அனுமதிக்கக்கூடாது.  
 
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதில் முன்னிரண்டும்கூட முக்கியமில்லை. கட்டுப்பாடுதான் முக்கியம். மிகவும் முக்கியம். எனவே இயக்கத்தை கட்சியைக் காப்பாற்ற கட்டுப்பாட்டையே தலைமை காப்பாற்றிட தயவு தாட்சண்யம் காட்டாமல் கட்டுப்பாட்டிற்காக தேவையான நடவடிக்கை எடுக்கத் தயங்கக் கூடாது என்றார்கள்.
 
இனமான பேராசிரியர் அன� ��பழகன், அப்போது தலைமையை எதிர்த்துக் கூறிய ஒரு கருத்துக்காக அவர் மீதே நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று, அவரை கண்டித்து அறிக்கைவிடத் தயங்கவில்லை தந்தை பெரியார்.  
 
அப்போது அவ்வறிக்கையில் குறிப்பிட்டார்கள். எனக்கு அன்பழகன் மீது கோபமோ, வெறுப்போ இல்லை. கழகக் கட்டுப்பாட்டிற்காகத்தான் இப்படி எழுதிட வேண்டியுள்ளது. தலைமை இடத்தில் அன்பழக� ��் இருந்து கருணாநிதி இப்படி கூறியிருந்தால் அவர்மீதும் கட்டுப்பாட்டை மீறிக் கருத்துக் கூறியதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதான் எழுதியிருப்பேன் என்று விளக்கமாக அவ்வறிக்கையில் குறிப்பிட்டார்கள்.
 
தி.மு.க. என்ற இயக்கம் காப்பாற்றப்பட வேண்டிய அவசியத்தை அன்று 1969-ல் தந்தை பெரியார் விளக்கியதை இப்போது அவர் தம் தொண்டன் என்ற முறையி� ��் அதேபோல் தி.மு.க. என்ற மகத்தான திராவிடர் இயக்கத்தை அதற்கு சோதனை ஏற்படும் கட்டத்தில் அதனை நினைவூட்டும் கடமையும், பொறுப்பும் உண்டு நமக்கு என்பதால் இதனை எழுத நேரிட்டு விட்டது.  
 
ஆளும் கட்சியின் மீது பலவகைகளிலும் அதிருப்திகள் தலை எடுக்கும் இக்காலகட்டத்தில் அவற்றை மனமாற்றம் செய்யும் வகையில் தி.மு.க.வில் உள்கட்சி பிரச்சினை என்பதை ஊட� ��ங்கள் பெரிதுபடுத்துவதை அரசியலில் அனைத்தும் அறிந்த கலைஞருக்கு தெரியாததல்ல.
 
மேலும் அந்த அறிக்கையில் தந்தை பெரியார் குறிப்பிடுகிறார். கலைஞர் தலைமையை நான் ஏற்கமாட்டேன் என்று கூட்டத்திற்கு தலைமை வகித்த க.அன்பழகன் என்று சொல்லியிருப்பதாக பத்திரிகைகளில் படித்தேன். இது மிகவும் கண்டிக்கத்தக்கதோடு, இதற்கு ஒழுங்கு நடவடிக்கையை தி.மு.க. க� ��்சி எடுத்துக் கொள்ளவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.
 
சுவரை வைத்துக் கொண்டுதான் சித்திரம் எழுத வேண்டும் என்பதுபோல கட்சியின் மரியாதை குறையுமானால் தலைக்கு தலை தன் இஷ்டப்படி பேச நடக்க இடம் கொடுத்து வந்தால் பொதுத் தொண்டுக்கு கண்டிப்பாய் அதில் இடம் இருக்காது. கட்சித் தலைவரின் முதற்கடமை கட்சியின் கவுரவத்தை காப்பதுதான் என்பதை தெரி வித்துக் கொள்கிறேன்.
 
என் கட்சி சாதாரண கட்சியானாலும் நான் உப தலைவரை நீக்கினேன். காரியதரிசியை நீக்கினேன். அதனால் எனக்கோ, கட்சிக்கோ ஒரு கெடுதியும் ஏற்பட்டு விடவில்லை.  
 
பொதுமக்களுக்கு ஒன்று மட்டும் சொல்கிறேன். தி.மு.கழகத்திற்கு உழுது பயிரிட்டவர் அறிஞர் அண்ணாதான். இதற்கு நீர்பாய்ச்சி நல்ல விளைச்சலை � �ண்டாக்கியவர் கலைஞர்தான். கட்சிக்கு கலைஞர் இல்லாவிட்டால் பதவிக்கு ஏராளமான மெம்பர்கள் கிடைக்கலாமே ஒழிய, கட்சியை கட்டிக் காக்க கட்சி அங்கத்தினர்களில் பத்து பேர் ஆதரவை உடைய அங்கத்தினர் யாருமில்லை என்பதுதான் என் கருத்து.
 
இதை நான் தி.மு.க. அங்கத்தினர்களுக்கே சொல்கிறேன். எனவே இன்று தி.மு.க. விற்கு வேண்டிய கட்டுப்பாடு, ஒழுங்குமுறை நடவடி� �்கைதான். தி.மு.க. வினால் மக்களுக்கு ஆக வேண்டிய காரியம் ஏராளம் இருப்பதால் இதை நானாக எனது சொந்த முறையில் கடமையை முன்னிட்டு எழுதுகிறேன்.   அங்கத்தினர்கள் மன்னிப்பார்களாக.
 
14.3.1969 அன்றைய விடுதலையில் கையொப்பமிட்டு தந்தை பெரியார் அறிக்கையில் காணப்படும் ஒரு சிறு பகுதி இது. மறுநாளும் இதுகுறித்த நீண்ட அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார் ப� �ரியார். தி.மு.க. என்பது வெறும் கண்ணீரால் மட்டுமே வளர்ந்த இயக்கம் அல்ல. செந்நீர் விட்டும், பல்லாயிரம் தொண்டர்கள், தோழர்கள் தியாகத்தால் வளர்ந்தோங்கிய மகத்தான ஆலமரம் ஆகும். விழுதுகள் அதனை காப்பாற்றிட மட்டுமே பயன்பட வேண்டும். அதன் வேரினை அசைக்க என்றும் வீணர்களுக்கு விழுதுகளே துணை போகக்கூடாது.
 
தெரிந்தோ, தெரியாமலோ நோயாளியை காப்பாற்றிட � ��றுவை சிகிச்சை அவசியம். சில நேரங்களில் இயக்க கட்டுப்பாட்டை காப்பாற்றிட, கடும் சிகிச்சை, அது அறுவை சிகிச்சையானாலும் செய்துதானே தீரவேண்டும். நோயாளியை நோயிலிருந்து காப்பாற்றிட.  
< span style="color: #cccccc;"> 
இயக்கமே எப்போதும் பிரதானமானது என்பதை அறியாதவர் அல்ல அதன் தலைவர் கலைஞர். இயக்கம் இருந்தால்தான் எவருக்கும் மதிப்பும், மரியாதையும் இந்த எண்ணம் எல்லோருக்கு ம் புரியும். எனவே கட்டுப் பாட்டை காப்பாற்ற இயக்க பாசம்- கொள்கை பாசத்திற்கு மட்டுமே முக்கியத்தவம் கொடுத்து மற்ற பாசங்கள் குறுக்கிட இடந்தராமல் காப்பாற்றிட முன்வரவேண்டும் என உரிமையுடன் உண்மை உணர்வுடன் தந்தை பெரியாரின் சிந்தனை வழிபட்ட நிலையில் கேட்டுக் கொள்கிறோம்.
 
தி.மு.க. வரலாற்றில் அண்ணாவுக்கு பிறகு அவரது உழைப்பு பல சோதனைகளை வென் று அவ்வியக்கத்தை காப்பாற்றி இருக்கிறது. இப்போதும் விரைந்த விவேகமான முடியும் நடவடிக்கையும்தான் இன எதிரிகளை வாயடைக்க செய்யும் நிலை ஏற்படும்.
 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger