News Update :
Powered by Blogger.

'மே-1' பில்லா -2 கண்டிப்பாக ரிலீஸ் - யுவன்!

Penulis : karthik on Friday, 20 April 2012 | 23:22

Friday, 20 April 2012




அஜித் நடிப்பில் சக்ரி டொலட்டி இயக்கிகொண்டிருக்கும் படம் பில்லா-2. இந்த படத்தின் முன்னோட்டம் சில நாட� �களுக்கு முன் ரிலீஸானது. ரிலீஸான ஒரு வாரத்திலேயே ஐந்து லட்சம் பார்வையாளர்களை தாண்டியதி. சில டெக்னிக்கல் கோளாறு காரணமாக அந்த முன்னோட்டத்தை எடுத்துவிட்டார்கள்.


இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் சுனில் கெதர்பல் நேற்று தனது சமூக இணையதளத்தில் "இன்று இரவு அல்லது நாளை முதல் பில்லா-3 படத்தின் டிரெய்லர் சின்னத்திரையில் ஒளிபரப் பப்படும். சில பிரச்சினைகள் காரணமாக இணையதளத்தில் வெளியிடுவதில் தாமதமாக வெளியிடுகிறோம்" என்று கூறியுள்ளார்.

இந்த படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ட்விட்டரில் " நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த பில்லா-2 படத்தின் இசை தல பிறந்த நாளன்று வெளியிடப்படுகிறது. படத்தில் ம� �த்தம் ஆறு பாடல்கள் உள்ளன" என்று கூறியுள்ளார்.

இது போன்ற நிகழ்ச்சிகளில் தலை காண்பிப்பதில் தல விருப்பம் கொள்ளமாட்டார். இருந்தாலும் பொருத்திருந்து பார்ப்போம் என்பதே ரசிகர்களின் நிலை. எனவே மே-1 பில்லா-2 படத்தின் பாடல் ரிலீஸ்.



comments | | Read More...

மீண்டு உள்ளே வா...: கனிமொழியிடம் மீண்டும் விசாரணை




கலைஞர் தொலைக் காட்சிக்கு ஸ்வான் டெலிகாம் நிறுவனத்திடம் இருந்து ரூ.233 கோடி கடன் பெறப்பட்டது. ஸ்பெக்ட்ரம் உரிமம் ஒதுக்கீடு பெறுவதற்காகவே ஸ்வான் டெலிகாம் நிறுவனம், இந்த அளவு பணத்தை கலைஞர் டி.வி.க்கு கொடுத்ததாக குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டன.

ஆனால் ரூ.233 கோடி பணம், கடனாகப் பெற்றது என்றும், அந்த கடன் திருப்பிக் கொடுக்கப்ப� ��்டு விட்டது என்றும் கலைஞர் தொலைக்காட்சி விளக்கம் அளித்தது.

கலைஞர் தொலைக் காட்சியில் கனிமொழி எம்.பி.க்கு 20 சதவீத பங்குகள் உள்ளன. எனவே ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கும் கலைஞர் தொலைக்காட்சிக்கும் இடையே நடந்த பண பரிமாற்றம் குறித்து சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவினர் விசாரணை நடத்தினர்.

சி.பி.ஐ. வழக்கில் கைதான கனிமொழி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டு பிறகு ஜாமீனில் விடுதலையானார். இந்த நிலையில் தற்போது அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கனிமொழியிடம் விசாரணை நடத்த தயாராகி வருகிறார்கள். ரூ.233 கோடி பணம் எப்படி, எந்த அடிப்படையில் கை மாறியது என்ற விசாரணையை அமலாக்கப்பிரிவு ஏற்கனவே நடத்தி விட்டது.

வங்கி கணக்குகளும் சரிபார்க்கப்பட்டன. இது தொடர்பாக விளக்கம் அளிக்க வருமாறு கனிமொழி எம்.பிக்கு அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பி உள்ளது. வருகிற 26-ந் தேதி டெல்லியில் உள்ள அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி உரிய ஆவணங்களைக் கொடுக்க வேண்டும் என்று அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்றாலும் 26-ந் தேதி கனிமொழி கண்டிப்பாக அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்றில்லை. அவரது பிரதிநிதி ஆஜரானால் கூட போதுமானது. அமலாக்கப்பிரிவின் சம்மனை ஏற்று கனிமொழி தனது வங்கி கணக்குகள், கலைஞர் டி.வி.யின் வங்கிக் கணக்குகள் மற்றும் கடன் பணபரிமாற்றத்துக்கான வங்கி கணக்கு விவரங்களை அமலாக்கப்பிரிவிடம் தாக்கல் செய்வார். அதன் அடிப்படையில் கனிமொயிடம் அமலாக்கப்பிரிவு விசாரணையை தொடங்கும்.

தற்போது பாராளுமன்ற கூட்டத் தொடர் நடந்து வருவதால் கனிமொழி அதில் பங்கேற்று வருகிறார். எனவே அடுத்த மாதம் (மே) 3-வது வாரம் பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்த பிறகு கனிமொழியிடம் அமலாக்கப்பரிவு அதிகாரிகள் விசாரணையை தொடங்குவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

கனிமொழி தவிர கலைஞர் டி.வி. முன்னாள் நிர்வாக இயக்குனர் சரத்குமார், ஸ்வான் டெலிகாம் அதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளளது. இதற்கிடையே சட்ட விரோத பணப் பரிமாற்றம் � ��டுப்புச் சட்டத்தின்கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவும் அமலாக்கப்பிரிவு தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.

அந்த சட்டத்தின் 4-வது பிரிவின் வழக்குகள் பதிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது. கலைஞர் டி.வி. பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கப்பிரிவு தற்போது தான் முதன்முதலாக வழக்கு பதிவு செய்வது குறிப்பிடத்தக்கது.



comments | | Read More...

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்




இந்தோனேஷியாவின் கிழக்கு பகுதியில் 6.9 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம்.  பப்புவாயில் உள்ள மனோக்வாரியை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  நிலநடுக்கத்தில் வீடுகள் குலுங்கியதால் மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
 
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் விவரம் குறித்த உடனடி தகவல் எதுவும் இல ்லை. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.






comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger