News Update :
Powered by Blogger.

மூச்சு விட சிரமப்பட்டதால் நடிக்க வரும் முன் மூக்கில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததாராம் ஸ்ருதி…

Penulis : karthik on Sunday, 26 February 2012 | 23:58

Sunday, 26 February 2012

 

கமல் ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி நடிக்க வரும் முன் மூக்கில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததாக தெரிவித்துள்ளார். கமல் ஹாசனின் மகள் ஸ்ருதி ஆமீர் கானின் மருமகன் இம்ரான் கான் நடித்த லக் படத்தில் கடந்த 2009ம் ஆண்டு அறிமுகமானார். இந்தியாஸ் கிளாம் திவா என்ற டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்ருதி தான் நடிக்க வரும் முன்பு மூக்கில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாலும் அதை மறைக்கும் நடிகைகளுக்கு மத்தியில் தானாக ஒப்புக் கொண்டுள்ளார் ஸ்ருதி. மூச்சு விட சிரமமாக இருந்ததால் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எங்கே மூக்கில் அறுவை சிகிச்சை செய்தால் பாடகியான தனது குரல் வளம் பாதிக்கப்படுமோ என்று பயந்துள்ளார். தற்போது சிகிச்சைக்குப் பிறகு நிம்மதியாக தூங்க முடிகிறது என்றும், பிரச்சனையின்றி பாட முடிகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். பாலிவுட்டில் லக் கைகொடுக்காவிட்டாலும் கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் ஸ்ருதிக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது. தற்பொழுது ஸ்ருதி நடித்து வரும் 3 படம் அடுத்த மாதம் ரிலீஸ் ஆகவுள்ளது கூடுதல் தகவலாகும்

comments | | Read More...

ஷாருக்கானுடன் இணையும் விக்ரம் -

 


சைத்தான் என்ற படத்தைப் பார்த்த ஷாருக்கான் அப்படத்தை வெகுவாக புகழ்ந்தார். சைத்தானை புகழ்ந்தால் சைத்தான் நம்மைவிடாது என்பது புராணம். ஷாருக்கான் விஷயத்திலும் அதுதான் நடந்திருக்கிறது.

சைத்தானை இயக்கிய பிஜாய் நம்பியார் விக்ரமை வைத்து டேவிட் என்ற படத்தை இயக்கி வருகிறார். பெயர் சிங்கிளாக இருந்தாலும் கதைப்படி 3 டேவிட்கள் வருகிறார்கள். அதில் முக்கியமான டேவிட் விக்ரம். இன்னொருவர் தமிழின் பிரபல நடிகராக இருப்பார் என்கிறார்கள். நம்பியா‌ரின் மூன்றாவது சாய்ஸ் ஷாருக்கான்.

டேவிட் படத்தை இந்தி, தமிழ் என இரு மொழிகளில் இயக்கி வருவதால் ஷாருக்கின் பெயர் இந்திப் படத்துக்கு பெரும் மார்க்கெட்டாக அமையும். மேலும் ஷாருக் நடித்தால் மட்டுமே அந்த கதாபாத்திரம் பேசப்படும் என நினைக்கிறார் பிஜாய் நம்பியார். இந்தப் படத்துக்கு ஷாருக்கின் 10 நாள் கால்ஷீட் போதும். சைத்தானை ரொம்பப் புகழ்ந்தவர் என்பதால் டேவிட்டில் நடிக்க ஒப்புக்கொள்வார் என நினைக்கிறார் பிஜாய்.

ஒரே படத்தில் விக்ரம், ஷாருக்கான். கேட்கவே நல்லாயிக்கே.
comments | | Read More...

இந்தியில் ரீமேக் ஆகும் வேட்டை



தமிழில் மாதவன், ஆர்யா, சமீராரெட்டி, அமலாபால் நடித்த வேட்டை படம் இந்தியிலும் ரீமேக் ஆகவிருக்கிறது. இந்த தகவலை டைரக்டர் லிங்குசாமியே வெளியிட்டுள்ளார்.

லிங்குசாமி அளித்துள்ள பேட்டியில், வேட்டை திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. அதனை நான்தான் இயக்குகிறேன். இதுவரை மட்டுமே முடிவு செய்யப்பட்டுள்ளது. மற்ற விஷயங்கள் குறித்த பேசி முடிவெடுக்க இன்னும் ஓரிரு நாட்களில் நான் மும்பை செல்லவிருக்கிறேன். அதன் பிறகுதான் மற்ற விஷயங்கள் தெரிய வரும், என்று கூறியுள்ளார்.

தற்போது தமிழில் விஷாலுக்கு இரண்டு கதைகளை தயாராக வைத்திருப்பதாக கூறியிருக்கும் லிங்குசாமி, தங்களது தயாரிப்பில் உருவாகியுள்ள வழக்கு எண் 18/9 படம் விரைவில் வெளியாக இருப்பதாகவும் பேட்டியில் கூறியிருக்கிறார்.
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger