News Update :
Powered by Blogger.

நான் என்ன கிழவனா? அரவிந்தசாமி கோபம்!

Penulis : karthik on Thursday, 9 February 2012 | 21:00

Thursday, 9 February 2012

 
 
 
அப்பா வேடத்தில் நடிக்கும் அளவுக்கு நான் என்ன கிழவன் ஆகி விட்டேனா? என்று நடிகர் அரவிந்தசாமி கேள்வி எழுப்பியுள்ளார். மணிரத்னம் இயக்கும் கடல் படத்தில் கதாநாயகி சமந்தாவின் அப்பாவாக அரவிந்த்சாமி நடிக்கப் போகிறார் என்று கோடம்பாக்கத்தில் கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன. மணிரத்னம் தரப்பு இதனை மறுக்காத நிலையில், சம்பந்தப்பட்ட நடிகர் அரவிந்தசாமி மறுப்பு தெரிவித்துள்ளார்.
 
இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், அப்பா வேடத்தில் நடிக்கும் அளவிற்கு நான் கிழவனாகிவிட்டேனா? இப்படியெல்லாம் குருட்டுத்தனமாக யோசிக்க சிலரால் எப்படி முடிகிறது? நான் எந்த வேடத்திலும் நடிப்பதாக இல்லை. மணிரத்னம் என்னை அணுகவில்லை. ஒருவேளை அவரே கேட்டிருந்தாலும் நடித்திருக்க மாட்டேன். இப்போது நான் தொழிலதிபராக இருக்கிறேன். எனக்கு இனி தொழில்களைக் கவனிப்பதுதான் முதலும் கடைசியுமான வேலை, என்று கூறியிருக்கிறார்.



comments | | Read More...

சூர்யாவுடன் மீண்டும் இணைந்து நடிப்பேன்: விஜய் பேட்டி

 
 
 
சூர்யாவுடன் மீண்டும் இணைந்து நடிப்பேன் என்று நடிகர் விஜய் கூறினார். நடிகர் விஜய் நடித்துள்ள நண்பன் திரைப்படம் தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டுள்ளது. மதுரையில் நண்பர் படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டரில் ரசிகர்கள் முன்னிலையில் நடிகர் விஜய் தோன்றினார். அங்கு திரண்டிருந்த ரசிகர்கள் மத்தியிலும் பேசினார்.
 
இதையடுத்து மதுரை காளவாசலில் உள்ள ஓட்டலில் நடந்த விழாவில் கே.கே.நகரில் உள்ள "ஷைன்" மனவளர்ச்சி குன்றிய பள்ளி மாணவ-மாணவிகளுடன் நடிகர் விஜய் கலந்துரையாடினார். அப்போது மாணவர் அசோக்தான் வரைந்த ஓவியத்தை நடிகர் விஜய்க்கு வழங்கினார். விழாவில் ஆதரவற்ற பெண்கள் 2 பேருக்கு தொழில் தொடங்க நிதி உதவியை விஜய் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
 
கே. கடந்த சட்டசபை தேர்தலின்போது ஒரு அரசியல் கட்சியை ஆதரித்தீர்கள். நீங்கள் நேரடியாக அரசியலுக்கு வருவது எப்போது?
ப. அரசியல் சம்பந்தமான கேள்விகள் இப்போது வேண்டாம். தற்போது சினிமா பற்றி மட்டும் பேசலாம்.
 
கே. "நண்பன்" படம் மாதிரி மீண்டும் 2 கதாநாயகர்களுடன் சேர்ந்து நடிப்பீர்களா?
ப. இந்த படத்தின் கதை போல அமைந்தால் நிச்சயம் நடிப்பேன். ஒரு படத்திற்கு கதை, திரைக்கதை தான் ஹீரோ. நாங்கள் அதற்கு பின்னணியில் தான் உள்ளோம்.
 
கே. நடிகர் சூர்யாவுடன் மீண்டும் இணைந்து நடிப்பீர்களா?
ப. படத்திற்கு கதைதான் முக்கியம். அதுபோல ஒரு கதை அமைந்தால் நிச்சயம் இணைந்து நடிப்பேன்.
 
கே. நீங்கள் தற்போது நடிக்கும் படம் எது?
ப. "துப்பாக்கி" என்ற படத்தில் நடித்து வருகிறேன். அதுவும் சிறப்பாக அமையும்.
 
கே. தமிழ் சினிமாவில் புதுமுகங்கள் நடித்து குறைந்த பட்ஜெட்டில் வெளிவரும் படங்கள் வெற்றி பெற்று வருகின்றன. அது குறித்து உங்கள் கருத்து என்ன?
ப. நிச்சயம் அது வரவேற்கத்தக்கது. நானும் ஒரு காலத்தில் புதிய நாயகன்தான். இவ்வாறு அவர் கூறி னார்.
 
விழாவில் மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார், ரசிகர்மன்ற மாவட்ட தலைவர் எஸ்.ஆர். தங்கப்பாண்டியன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



comments | | Read More...

ஓவர் லிப்-டூ-லிப் முத்தக்காட்சி :அர்ஜூன் படத்திற்கு 14கட்!!

 
 
 
டினு வர்மா இயக்கத்தில், அர்ஜூன் நடித்து வரும் காட்டுபுலி படத்தில், ஓவர் லிப் - டூ - லிப் காட்சிகள் இருந்ததால் 14 கட் கொடுத்துள்ளனர் சென்சார் போர்டு அதிகாரிகள். பிரபல பாலிவுட் சண்டை இயக்குநர் டினு வர்மா தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் இயக்கி வரும் படம் காட்டுபுலி. இப்படத்தில் நாயகனாக அர்ஜூனும், அவருக்கு ஜோடியாக பியங்கா தேசாயும் நடித்துள்ளனர். கூடவே இவர்களுடன் ராஜ் நீஸ் சாயாலி பகத், அமீத்- ஹன்யா, ஜாஹன் ஜெனிபர் ஆகியோரும் நடித்துள்ளனர்.
 
சமூகத்தைப் பாதுகாக்கும் முக்கியமான மூன்று துறைகளில் ஒன்றான மருத்துவத்துறையில் நுழையும் புல்லுருவிகளால், சமூகத்திற்கு எவ்வளவு பெரிய ஆபத்து ஏற்படுகிறது என்று அலசியிருக்கிறார் இயக்குனர் டினு வர்மா.
 
முழுக்கமுழுக்க நரமாமிசம் உண்பவர்கள், மனிதர்களை வேட்டையாடும் காட்சிகள் போன்றவை திரைப்பட ரசிகர்களுக்கு திகிலுடன் கூடிய புது அனுபவமாக இருக்கும். தனது மனைவி குழந்தையுடன் காட்டுக்குள் சிக்கிக் கொள்ளும் டாக்டர் அர்ஜூனுக்கு உதவி செய்ய வரும் மூன்று ஜோடிகள், அதனைத் தொடர்ந்து ஏற்படும் பரபரப்பான சம்பவங்கள், கொலைகள், அதிலிருந்து எப்படி அனைவரையும் அர்ஜூன் காப்பாற்றுகிறார் என்பதே காட்டுப் புலியின் விறுவிறுப்பான கதை.
 
படத்தில் நிறைய திகில் காட்சிகளை வைத்திருக்கும் டைரக்டர் கூடவே நிறைய கிளுகிளு காட்சிகளையும் அதிகமாக வைத்துள்ளார். அதிலும் குறிப்பாக ஜாஹன் ஜெனிபர் ஜோடிக்களுக்கு இடையே வரும் லிப் டூ லிப் முத்துக்காட்சியை பார்த்த சென்சார் போர்டு 14 ‌கட் கொடுத்திருக்கிறது. அந்தளவிற்கு படத்தில் கிறங்கடிக்கும் காட்சிகள் இருந்திருக்கிறது. சென்சார் போர்ட்டின் இந்த நடவடிக்கை டைரக்டருக்கு ஒருவிதம் வருத்தம் அளித்தாலும், அனைத்து தரப்பினரும் படத்தைப் பார்த்து ரசிக்கவேண்டும் என்கிற எண்ணத்தில் அதனை ஏற்றுக் கொண்டுள்ளார்.
 
டினு வர்மா தனது, கிபிஷேக் பிலிம்ஸ் சார்பாக தயாரித்து இருக்கும் இப்படம் வரும் பிப்ரவரி 17 ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது.



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger