News Update :
Powered by Blogger.

ஜெயலலிதாவை பிரதமராக்க ஒத்துழைக்க வேண்டும்: பாஜகவுக்கு கோரிக்கை

Penulis : karthik on Saturday, 14 January 2012 | 22:57

Saturday, 14 January 2012

சென்னையில் நேற்று ( 14.1.2012) நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாஜகவின் மூத்த
தலைவரும் , முன்னாள் துணைப் பிரதமருமான அத்வானி , குஜராத் முதல்வர்
நரேந்திர மோடி , தமிழக பா.ஜ. , தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் , முன்னாள்
தலைவர் இல.கணேசன் , இந்து முன்னணி ராம.கோபாலன் , உள்ளிட்டோர் கலந்து
கொண்டனர்.
குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடி பேசும்போது
`` வணக்கம் , அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள் '' என்று தமிழில்
பேசி தன் பேச்சை ஆங்கிலத்தில் தொடங்கினார். அப்போது அவர் கூறியதாவது ;-
தமிழ்நாட்டிற்கும் , குஜராத்திற்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. நீண்ட
காலமாகஇரு மாநிலங்களுக்கு நல்லுறவு இருந்து வருகிறது. தமிழர்களுக்கு
காப்பி என்றால் மிகவும் பிடிக்கும். அந்த காப்பிக்கு தேவைப்படும்
சிக்கிரி குஜராத்தில் அதிகம் விளைகிறது. அதேபோல் , தமிழ் பெண்களுக்கு
பருத்தி சேலை மிகவும் பிடிக்கும்.
இந்தியாவில் அதிக பருத்தி சேலைகள் தயாரிக்கப்படுவது குஜராத்
மாநிலத்தில்தான். தமிழர்கள் சமையலுக்கு அதிகம் பயன்படுத்தும் கடலை
எண்ணெய் உற்பத்தியில் குஜராத் முன்னணியில் உள்ளது. குஜராத்தை பூர்வீகமாக
கொண்ட சவுராஷ்டிரர்கள் தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து
மண்ணின் மைந்தர்களாகவே மாறிவிட்டார்கள்.
இதேபோல் குஜராத்திலும் எனது மணிநகர் தொகுதியில் மட்டும் 20
ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கிறார்கள். இரு தரப்பினரும்
தத்தம் மாநில பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
குஜராத் , தமிழ்நாடு இரு மாநிலங்களும் வளர்ச்சி பாதையை நோக்கி பயணம்
செய்கின்றன.
மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு , காங்கிரஸ் ஆட்சியில் அல்லாத
மாநிலங்களிடம் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்துகொள்கிறது. அந்த
வகையில் தமிழகமும் , குஜராத்தும் தொடர்ந்து மத்திய அரசால்
புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.மாநில அரசுகளின் உரிமைகளை மத்திய அரசு
பறிக்கிறது.
இது இந்திய கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது ஆகும். காங்கிரஸ் அரசு
ஆட்சியை தக்க வைத்துக்கொள்வதில் மட்டுமே குறியாக இருக்கிறதே தவிர ,
நாட்டின் ஆக்கப்பூர்வமான வளர்ச்சியிலோ , முன்னேற்றத்திலோஅக்கறை
செலுத்தவில்லை. சிறுபான்மை மக்களை வாக்கு வங்கிகளாக பயன்படுத்திவிட்டு
மக்களிடையே மத , இன , பிராந்திய ரீதியாக வேற்றுமை உணர்வை ஏற்படுத்தி
வருகிறது.
இவ்வாறு நரேந்திர மோடி கூறினார்.
முன்னதாக , துக்ளக் ஆசிரியர் சோ , துக்ளக் அலுவலக நிர்வாகிகளை மேடையில்
ஒவ்வொருவராக அறிமுகப்படுத்திவைத்தார். பின்னர் துக்ளக் வாசகர்கள்
எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துப்பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த சட்டமன்ற தேர்தலில் இலவச திட்டங்களை ஜெயலலிதா
அறிவித்திருக்காவிட்டால் தி.மு.க.தான் தொடர்ந்து ஆட்சியில்
இருந்திருக்கும். அரசியல் உத்திக்காகத்தான் ஜெயலலிதா இலவசங்களை அறிவிக்க
வேண்டியது இருந்தது. ஆனால் , பதவியேற்றதும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தான்
அறிவித்த இலவச திட்டங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார்.
அவரை போல் தினமும் தலைமைச் செயலகத்திற்குச் சென்று உழைக்கக்கூடிய ஒரு
முதல்-அமைச்சரை இதுவரை பார்த்து இல்லை. தவறு என்று தெரிந்துவிட்டால்
அவரைப் போல தைரியமாக யாராலும் நடவடிக்கை எடுக்க முடியாது.
குஜராத் மாநிலம் அனைத்து துறைகளிலும் வளர்ந்தது போல தமிழகத்திலும்
வளர்ச்சியை ஏற்படுத்த ஜெயலலிதா ஆசைப்படுகிறார். அதற்கு அவர் தொடர்ந்து 10
ஆண்டுகள் ஆட்சியில் இருக்க வேண்டும். தேசப்பக்தி , கடின உழைப்பு ,
பலமொழிகள் பேசும்திறன் , எதையும் எளிதாக கிரகித்துக்கொள்ளும் ஆற்றல்
உள்பட பல்வேறு திறமைகள் அவரிடம் காணப்படுகின்றன.
மத்தியில் அடுத்து அமைய உள்ள புதிய ஆட்சியை உருவாக்கும் பணியில்
அ.தி.மு.க.வுக்கு நிச்சயம் பங்கு இருக்கும். மத்தியில் பா.ஜ.க. அல்லாமல்
அது ஆதரிக்கும் கட்சி ஆட்சிக்கு வருவதாக இருந்தால் ஜெயலலிதா பிரதமராக வர
வேண்டும்.
இவ்வாறு சோ கூறினார்.
விழாவில் , பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன் , மாநில தலைவர்
பொன்.ராதாகிருஷ்ணன் , முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் , துணை
பொதுச்செயலாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பத்திரிகையாளர்
எஸ்.குருமூர்த்தி , சினிமா டைரக்டர் கே.பாலச்சந்தர் , நடிகர் ரஜினிகாந்த்
, முன்னாள் டி.ஜி.பி. நட்ராஜ் , வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர்
ஜி.விஸ்வநாதன் , முன்னாள் எம்.பி.இரா.செழியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
comments | | Read More...

மனைவிக்கு போதை மாத்திரை கொடுத்து ஆபாச படம்

கோவையை சேர்ந்த 20 வயது பெண் ஒருவர் கோவை அனைத்து மகளிர் போலீஸ்
நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் ,
'' எனக்கும் பெங்களூர் ஆர்.கே.நகரை சேர்ந்த முகமது பயாஸ் ( 25 )
என்பவருக்கும் கடந்த 5.12.2010 அன்று திருமணம் நடந்தது. திருமணத்துக்கு
பின் நாங்கள் பெங்களூரில் தனிக்குடித்தனம் நடத்தினோம்.
அங்கு சென்றதும் கணவர் வேலைக்கு செல்லாமலும் , வீட்டுக்கு ஒழுங்காக
வராமலும் இருந்தார். என்னை வீட்டில் அடைத்து வைத்து , என்னுடைய
செல்போனையும் பறித்து வைத்துக்கொண்டார்.
ஒரு நாள் தலைவலிக்கு மாத்திரை கேட்டேன். அதற்கு கணவர் கொடுத்தமாத்திரையை
சாப்பிட்டதும் மயங்கி விட்டேன். பின்னர் அவரதுநண்பரை , என்னோடு சேர்த்து
ஆபாச படம் எடுத்துள்ளார்.
மயக்கம் தெளிந்ததும் , அதை என்னிடம் காட்டி எனது பெற்றோரிடமிருந்து 10
பவுன் நகை மற்றும் ரூ. 10 ஆயிரம் வாங்கி வா.
இல்லையென்றால் ஆபாச படத்தை இன்டர்நெட்டில் வெளியிட்டு அசிங்கப்படுத்தி
விடுவேன் என்று மிரட்டி கொடுமைப்படுத்தினார். எனவே அவர் மீது நடவடிக்கை
எடுக்க வேண்டும் '' என்று கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து முகமது பயாஸ் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை
தேடி பெங்களூர் விரைந்துள்ளனர்.
comments | | Read More...

பெர்த் டெஸ்ட்: இன்னிங்ஸ் தோல்வியை தழுவியது இந்தியா

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே பெர்த்தில் நடைபெற்ற மூன்றாவது
டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 37 ரன்கள்
வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதனால் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட்
தொடரை ஆஸி. அணி 3-0என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம்
செய்து 4 டெஸ்ட்போட்டிகளில் விளையாடுகிறது. இதில் மெல்போர்ன் மற்றும்
சிட்னியில் நடந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா படுதோல்வி அடைந்தது.
3-வது டெஸ்ட் பெர்த்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.
முதல் இன்னிங்சில் இந்தியா 161ரன்னில் சுருண்டது. அதன்பின் முதல்
இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட்
இழப்பின்றி 149 ரன் எடுத்திருந்தது. வார்னர் 104 ரன்னுடனும் , கோவன் 40
ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
நேற்று 2வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில்
கோவன் அரைசதம் அடித்தார். அரை சதம் அடித்த கோவன் 70 ரன்னில் ஆட்டம்
இழந்தார். அதன்பின் வந்தமார்ஷ் 11 ரன்னிலும் , பாண்டிங் 7 ரன்னிலும்
ஆட்டம் இழந்தனர். மூன்று விக்கெட்டுகளையும் யாதவ் வீழ்த்தினார். ஒருபுறம்
விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் வார்னர் சிறப்பாக விளையாடி வார்னர்
150 ரன்னை கடந்தார். அதிரடியாக விளையாடிய வார்னர் 180 ரன் எடுத்து
ஆட்டம் இழந்தார்.
வார்னரின் விக்கெட் வீழ்ந்ததும் ஆஸ்திரேலியாவின் விக்கெட்டுகள் மளமளவென
சரிந்தது. இறுதியில் ஆஸ்திரேலியா 369 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக உமேஷ் யாதவ் 5 விக்கெட்டுகளை
கைப்பற்றினார்.
208 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா 2வது இன்னிங்சை தொடங்கியது.
வழக்கம்போல் முன்னணி வீரர்களான காம்பீர் (14) , சேவாக் (10) , சச்சின்
(8) , லட்சுமண் (0) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
5வது விக்கெட்டுக்கு டிராவிட்டுடன் வீராட் கோக்லி ஜோடி சேர்ந்தார்.
நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட்
இழப்பிற்கு 88 ரன்கள்எடுத்திருந்தது. டிராவிட் 32 ரன்களுடனும் , விராட்
கோக்லி 21 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று மூன்றாம் நாள் ஆட்டம் துவங்கியது. இருவரும் நிதானமாக ஆடி ஸ்கோரை
மெதுவாக உயர்த்தினர். இவர்களது ஆட்டம் ரசிகர்களுக்கு சிறிது நம்பிக்கையை
தந்தது. விராட் கோக்லி அரை சதம் அடித்து ஆறுதல்தந்தார்.
அரை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் சுவரான
டிராவிட் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த கேப்டன் டோனி பொறுப்பே
இல்லாமல் 2 ரன்னில் ஆட்டமிழந்து எரிச்சலூட்டினார்.
அடுத்து வந்த டெயிலெண்டர்களும்வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பி விட
இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 171 ரன்களுக்குள் சுருண்டது. இது
முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 10 ரன்கள் மட்டும் அதிகம் என்பது
குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக கோக்லி 75 ரன்கள் எடுத்து
ஆட்டமிழந்தார். ஆஸி. அணி தரப்பில் ஹில்பெனாஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி
அசத்தினார்.
அதிரடியாக ரன் குவித்த ஆஸி. அணி வீரர் டேவிட் வார்னர் இப்போட்டியின்
ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger