News Update :
Powered by Blogger.

சினேகா - பிரசன்னா விரைவில் திருமணம்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Penulis : karthik on Wednesday, 9 November 2011 | 07:55

Wednesday, 9 November 2011

 
 
தமிழ் சினிமாவில் புன்னகை இளவரசி என வர்ணிக்கப்படும் நடிகை சினேகாவுக்கும், நடிகர் பிரசன்னாவுக்கும் பெற்றோர் சம்மதத்துடன் விரைவில் திருமணம் நடக்கிறது. இதனை நடிகர் பிரசன்னாவே இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
 
நடிகர் பிரசன்னாவும் சினேகாவும் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் இணைந்து நடித்தனர். அதன் பிறகு இருவரும் நல்ல நண்பர்களாகத் திகழ்ந்தனர். இருவரும் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. இருவரும் இதுகுறித்து எந்த மறுப்பும் தெரிவித்ததில்லை.
 
இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாக தங்கள் பிஆர்ஓ ஜான் மூலம் தெரிவித்துள்ளனர்.
 
இருவீட்டாரின் சம்மதத்துடன் இந்த மாத இறுதிக்குள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடக்கவுள்ளது.
 
இதுகுறித்து நடிகர் பிரசன்னா கூறியுள்ளதாவது:
 
சினேகாவுக்கும் எனக்கும் திருமணம் என்பது உண்மைதான். எங்கள் இருவரின் பெற்றோர் சம்மதத்துடன் இந்த மாத இறுதிக்குள் திருமண நிச்சயதார்த்தம் நடக்கும். ஆனால் வரும் மார்ச் மாதம் திருமணம் என்று சிலர் எழுதியுள்ளனர். இதில் உண்மையில்லை. திருமணம் எப்போது என்பதை விரைவில் நாங்களே முறைப்படி அறிவிக்கிறோம்," என்றார்.
 
வாழ்த்துக்கள்!



comments | | Read More...

விஜய் - தனுஷ் மோதல்

 
 
 
தனது மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் நடித்து வரும் தனுஷின் '3' படம் பொங்கல் அன்று திரைக்கு வரலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன. பொங்கல் அன்று படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்ட ஐஸ்வர்யா விரைவில் மொத்தப் படத்தையும் முடிக்க முடிவு செய்துள்ளாராம். ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் வரும் முதல் படம் இது. அதனால் பொங்கல் போன்ற பண்டிகை தினத்தில் படத்தை வெளியிட ஆர்வம் காட்டுகிறார் என தெரிகிறது. படத்தின் தலைப்பிற்கு ஓர் அர்த்தம் உள்ளதாகவும், படத்தை பார்த்தால் அர்த்தம் புரியும் எனவும் ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார்.
 
விஜயின் நடிப்பில் சங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் நண்பன் திரைப்படமும் பொங்கலுக்கு வெளிவர இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி வெளிவரும் பட்சத்தில் விஜய், சங்கர் என்ற பிமாண்ட கூட்டணியுடன் மோத வேண்டிய நிலைமைக்கு தனுஷ் தள்ளப்படுவார். ஏன்கனவே விஜயின் காவலனுடன் ஆடுகளம் படத்தை மோத விட்டு மதுரையில் ஆடுகளம் திரையிட்ட பல திரையரங்குகள் விஜய் ரசிகர்களால் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


 
 


comments | | Read More...

இரண்டு விதமாக 'காதல் என் காதல்' ! : செல்வராகவன்

 
 


தனுஷ், ரிச்சா நடித்து இருக்கும் படம் 'மயக்கம் என்ன'. செல்வராகவன் இயக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து இருக்கிறார்.

தீபாவளி வெளியீடு என்று அறிவித்தாலும் இயக்குனர் செல்வராகவனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தேதி அறிவிக்கப்படமால் இருந்தது.

இப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் இளைஞர்களிடம் வரவேற்பை பெற்று இருப்பதால் படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.

'மயக்கம் என்ன' பட வெளியீடு குறித்து இயக்குனர் செல்வராகவன் தனது டிவிட்டர் இணையத்தில் " 'காதல் என் காதல்' பாடலை இரண்டு விதமாக தயார் செய்து இருக்கிறோம். படம் வெளியான முதல் வாரம் அப்பாடலின் ஒரு விதம் மட்டுமே படத்தில் இடம் பெறும்.

இரண்டாம் வாரம் முதல் இரண்டு விதங்களுமே படத்தில் இடம் பெறும். வரும் 18ம் தேதி படத்தினை வெளியிட தீர்மானித்து இருக்கிறோம். கண்டிப்பாக அனைவருக்கும் இப்படம் பிடிக்கும் " என்று தெரிவித்துள்ளார்.



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger