Friday, 13 September 2013
அஜித்தை ஹாலிவுட்டில் இயக்க ஆசை!
- Tamil newsToday
ஹாலிவுட்டில் அஜித்தை வைத்து படம் இயக்க ஆசைப்படுவதாக இயக்குனர் விஷ்னுவர்தன் தெரிவித்துள்ளார்.
ராம்கோபால் வர்மா, சந்தோஷ் சிவன், மணிரத்னம் எனும் மகா மெகா இயக்குநர்களிடம் சினிமா கற்றவர் விஷ்ணுவர்தன்.
மணிரத்னம் இயக்கிய அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர், டீன் ஏஜ் பருவத்தில் சந்தோஷ் சிவன் இயக்கிய படங்களில் சின்னச் சின்ன வேடங்களில் நடித்துள்ளார்.
இதன் பின்பு குறும்பு படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
அறிந்தும் அறியாமலும், பட்டியல், பில்லா, சர்வம் படங்களைத் தொடர்ந்து இப்போது ஆரம்பம் படத்தை இயக்கிவருகிறார்.
எப்போ பாலிவுட்ல படம் பண்ணப் போறீங்க? என்று கேள்விக்கு, ஹாலிவுட்ல கூட படம் பண்ணணும்னு ஆசை இருக்கு என்று சிரிக்கிறார்.
நான் பாலிவுட்லயே செட்டில் ஆகியிருக்க வேண்டிய ஆள் தான். என்னோட ஆரம்பம் சென்னைல இருக்கணும்னுதான் இங்கே வந்தேன்.
திரும்ப பாலிவுட் போறது ஈஸி, ஒரு நல்ல கதை ரெடி பண்ணிட்டுப் போயிடலாம்.
ஆனா பாலிவுட், ஹாலிவுட்ல அஜித்தை வேற மாதிரி காட்ட ஆசைப்படறேன்.
டைம் கிடைச்சா பாலிவுட் மட்டும் இல்லை, ஹாலிவுட் படமே எடுப்பேன்.
அது வேற ஒரு ப்ராசஸ், ஆனால் கண்டிப்பாக நடக்கும் என்கிறார் விஷ்ணுவர்தன்.
Show commentsOpen link